குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!
எனக்கு குண்டா இருக்க பிடிக்காது!பரோட்டா, சிக்கன், ஸ்வீட்ஸ்... இதெல்லாம் நான் சாப்பிடவே மாட்டேன். ஏன் தெரியுமா... அதிகமா சாப்பிட்டால், என் அம்மா மாதிரி, நானும் குண்டாயிடுவேன். மீன், சிக்கன் எல்லாம் அம்மா நிறைய சாப்பிடுவாங்க. தாத்தாவும், அப்பாவும், 'இப்படி சாப்பிட்டா, 'வெயிட்' எப்படி குறையும்'ன்னு அம்மாவை கேட்பாங்க. அம்மாவால், உட்கார்ந்தா எழுந்திருக்க முடியல; வேகமாக நடக்க முடியல... பரோட்டா, ஸ்வீட், நான் - வெஜ்ன்னு அம்மா சாப்பிடுறதை எல்லாம் சாப்பிட்டா, குண்டாயிடுவாங்கன்னு தெரியுது. எனக்கு, குண்டாக இருக்க இஷ்டம் இல்லை. அதனால், நீங்க எப்படி ஏமாத்தினாலும், நான் அம்மா சாப்பிடுறதை எல்லாம் தொடவே மாட்டேன்.எந்த, 'புட்' எல்லாம் சாப்பிட்டா குண்டாவாங்கன்னு, 'நெட்'ல படிச்சேன். அதுக்குப் பிறகு, வெளியில என்னை கூட்டிட்டு போறப்பவும், 'ஜங்க் புட்' எல்லாம் கேட்கவே மாட்டேன். நிறைய புரூட்ஸ், வெஜிடபிள்ஸ், பால், பருப்பு எல்லாம் சாப்பிட்டு, ரொம்ப, 'ஹெல்த்'தியா இருக்கேன்.எஸ். வேதிகா,நான்காம் வகுப்பு மாணவி, திருச்சி.