நாங்க இப்படிதானுங்க!: தூங்கி எழுந்தவுடன் வொர்க் - அவுட்!
என்னை நான் மிகவும் நேசிக்கிறேன். இப்போது என்னவாக இருக்கிறேனோ, அதை அப்படியே ஏற்று, ரசிக்கிறேன். என் மீது, எனக்கு உள்ள காதல் தான், என்னை வலிமை மிக்கவளாகவும், சக்தி வாய்ந்தவளாகவும் உணரச் செய்கிறது. ஜிம்மில், 'வொர்க் - அவுட்' செய்வதை நான் விரும்புவதில்லை; ஆனாலும், தினமும் இரண்டு மணி நேரம் டென்னிஸ் மைதானத்தில் பயிற்சி முடித்து, அதே அளவு ஜிம்மிலும் வொர்க் -அவுட் செய்கிறேன். கால்களின் வலிமைக்கும், இதயத்தின் வலிமைக்கும், 'ரன்னிங்' நல்லது. அது நீண்ட துாரமானாலும் சரி, குறைந்த துாரமானாலும் சரி... எல்லா வகையான நடனமும் ஆடப் பிடிக்கும். இளம் வயதில், காலை வேளைகளில் தவறாமல் உடற்பயிற்சி செய்தேன். தற்போது, எந்த நேரம் துாங்கி விழிக்கிறேனோ, அதன்பின், வொர்க் - அவுட்டை ஆரம்பிக்கிறேன்.- செரீனா வில்லியம்ஸ்,சர்வதேச டென்னிஸ் ஆட்டக்காரர்.