உள்ளூர் செய்திகள்

ரத்த புற்றுநோயை எளிதில் கண்டறியலாம்

நதியா, மதுரை: ரத்தப் புற்றுநோயை கண்டறிவது எவ்வாறு?ரத்த அணுக்கள் குறையும் போது, ரத்த சோகை, காய்ச்சல் அல்லது ரத்தம் கசிதல் போன்ற அறிகுறிகள் தோன்றும். அந்த காலகட்டத்தில், சி.பி.சி., என்னும் பரிசோதனை (கம்ப்ளீட் பிளட் கவுன்ட்) செய்வதன் மூலம், ரத்தப் புற்றுநோய் உள்ளதா என்பதை கண்டறிய முடியும். 100-க்கு, 90 சதவீதம் பேருக்கு, சி.பி.சி., மூலமே ரத்தப் புற்றுநோயை கண்டறிய முடியும். ஒரு சிலருக்கு, எலும்பு மஜ்ஜையை பரிசோதனை செய்வதால், தெரிய வரும். ரத்தத்தில், புற்றுநோய் அணுக்கள் உள்ள போது, அது, எந்த வகை ரத்த புற்றுநோய் என்பதையும், எளிதில் கண்டறியலாம். ரத்தப் புற்று நோயை, குணப்படுத்தவே முடியாது என்பது மூடநம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்