நீண்ட ஆயுள் தரும் ஆயில் புல்லிங்
நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி கொப்பளிப்பதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். இத்தகைய நல்லெண்ணெய்யில் வாயைக் கொப்பளிப்பது 'ஆயில் புல்லிங்' என்று கூறப்படுகிறது. இதனால் உடலில் உள்ள நோய்களும் குணமாகின்றன. இத்தகைய ஆயில் புல்லிங்கை விடியற்காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில், பல் துலக்கியதும், சுத்தமான நல்லெண்ணெயை இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டு, அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே, ஊடுருவிச் செல்லுமாறு நன்கு கொப்பளிக்க வேண்டும். இப்படி 15 முதல் 20 நிமிடங்கள் வரை, தொடர்ந்து கொப்பளிக்கவும். நீரினால் வாயையும், பற்களையும் நன்கு கழுவ வேண்டும். பிறகு 2 முதல் 3 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். நோய்களை குணமாக்கும்: மூட்டு வலி, முழங்கால் வலி, இருமல் மற்றும் சளி, பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள், கண் காது மூக்கு சம்பந்தமான நோய்கள், வயிறு, குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், களைப்பு, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத்தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி), ஒற்றை தலைவலி போன்ற நோய்களை உடனடியாக குணப்படுத்துகிறது. நம் உடலில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தம், இதய நோய், பார்க்கின்சன் நோய்கள், கல்லீரல், நுரையீரல் நோய், புற்று நோய், பக்கவாதம், நரம்பு சம்பந்தமான நோய்களையும் கட்டுப்படுத்துவதாக மருத்துவர்களில் ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர். சுத்தமான நல்லெண்ணெய் 10ml அளவு எடுத்து, வாயில் விட்டுக் கொண்டு, அதை வாய் முழுவதும் படும்படியாக கொப்பளிக்க வேண்டும். 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொப்பளிக்கலாம். பற்களின் இடைவெளிகளுக்குள், எண்ணெய் போகும்படி செய்ய வேண்டும். 15 நிமிடத்தில் எண்ணெய் நுரைத்து, வெண்மையாகி நீர்த்துப் போகும். அப்போது அதை உமிழ்ந்து விட வேண்டும். அதன் பிறகு வாயை நன்கு கழுவிக் கொள்ளவும். எந்த நேரம் நல்ல நேரம் இந்த எண்ணெய் மருத்துவம் செய்வதற்கு ஏற்ற நேரம் அதிகாலை. நாம் பல் தேய்த்த பிறகு, உணவு உட்கொள்ளும் முன்பு எனில் மிக நல்ல பலன் கிடைக்கும். எவ்வளவு காலம் செய்யலாம்?: நல்ல பசி, ஆழ்ந்த அமைதியான உறக்கம், வரும்வரைக்கும் எண்ணெய்க் கொப்பளிப்பு தொடர்ந்து செய்ய வேண்டும். ஆனால் 9 மாதம் முதல் ஓர் ஆண்டு வரை எண்ணெய்க் கொப்பளிப்பு செய்வதை தொடர்ந்தால் உடலுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.நன்மைகள்: தோலின் மீது குழிகளும் வெடிப்புகளும் மறைந்து தோல் பளபளப்பாகிறது. கை, கால், விரல்கள் மெருகுற்று இரத்த ஓட்டம் பெருகியதற்கான அறிகுறிகள் தெரியும்.