உள்ளூர் செய்திகள்

மலச்சிக்கல் தீர மணலிக்கீரை

உடல் ஆரோக்கியத்தை விரும்பும், பெரும்பாலானவர்களின் முக்கிய உணவாக இன்று மாறியிருக்கிறது கீரை. பல்வேறு நோய்களை தீர்ப்பதில், கீரைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. நோய்களை குணமாக்கும் சிலவகை மருந்துகளை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தும்போது, பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. ஆனால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படுத்தாத, இயற்கை மருத்துவமாக கீரை விளங்குகிறது. கீரைகளில் பலவகை உண்டு. இதில் மணலிக்கீரையின் மகத்துவம் பெரிது. மணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்து மே மருத்துவக்குணம் வாய்ந்தது. மலச்சிக்கல் குணமாக: மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து, கூட்டு தயார் செய்து, சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்னை குணமாகும். ஞாபக சக்தி பெருக: ஞாபக மறதிக்கு முக்கிய காரணம், பித்த அதிகரிப்பு. மூளைக்குத் தேவையான சத்து குறைவதாலும், இப்பிரச்னை ஏற்படுகிறது. இப்பிரச்னை தீர மணலிக்கீரையை மசியல் செய்து சாப்பிட வேண்டும். குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறைய: மணலிக்கீரையின் வேர், இலைகளை நீர் விட்டு நன்கு அரைத்து அதில், 70 கிராம் அளவு எடுத்து நீரில் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் பருகினால், குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறையும். மார்பு சளி, வயிற்றுப்புண் குணமாகும். மூளை நரம்புகள் பலம்பெற: மணலிக்கீரை வதக்கி சாப்பிட்டால், மூளை நரம்புகள் பலப்படும்.ஈரல் பலம் பெற:மணலிக்கீரையை கஷாயம் செய்து குடித்தால் ஈரல் பலப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்