உள்ளூர் செய்திகள்

கேன்சர் தலைநகராக மாறும் நம் நாடு!

'டைம்' என்ற ஆங்கில பத்திரிகையில், 'அப்போலோ' மருத்துவமனை வெளியிட்ட கட்டுரை அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. அதில், நம் நாடு இத்தனை ஆண்டுகளாக சர்க்கரை நோயாளிகளின் தலைநகரமாக இருந்து வந்தது; சமீப ஆண்டுகளில் கேன்சர் தலைநகரமாகவும் மாறி வருகிறது. 29 - 40 வயதினரில், மூன்றில் ஒருவருக்கு சர்க்கரை கோளாறு, மூன்றில் இருவருக்கு உயர் ரத்த அழுத்தம் வரும் வாய்ப்புகள் உள்ளன. ஐந்தில் இருவருக்கு கேன்சர் வரும் அபாயமும் உள்ளது. இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, புகையிலை பொருட்களை அதிகம் பயன் படுத்துவது. பொதுவாக நாம் நினைப்பது, அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் சிகரெட், மதுப்பழக்கம் அதிகமாக இருக்கும். உண்மை அதுவல்ல, அங்கெல்லாம் சிகரெட் பிடிக்க தடை விதிக்கப்பட்ட பகுதிகள், நிறைய இருக்கும். சிகரெட் பழக்கம் சம்பந்தப்பட்ட நபரை மட்டும் பாதிப்பதில்லை. அவர்கள் வெ ளியிடும் புகை, சுற்றி இருப்பவர்களையும் அதிகம் பாதிக்கிறது. நான் அமெரிக்காவில் மருத்துவ பயிற்சிக்காக பல ஆண்டுகள் இருந்திருக்கிறேன். இப்போதும் கருத்தரங்குக ளில் கலந்து கொள்ள, ஆண்டுதோறும் வெளிநாடு களுக்கு சென்று வருகிறேன். நம் ஊரில் பொது இடங்களில் சிகரெட் புகைப்பவர்களின் அருகில் செல்ல வேண்டிய சந்தர்ப்பங்களில், பொது இடங்களில் புகை பிடிக்க நம் நாட்டில் தடை இருந்தும், ஏன் யாரும் பொறுப்புடன் நடப்பதில்லை என்று, ஒவ்வொரு முறையும் யோசிப்பேன். யாரோ ஒருவர் வெளியிடும் சிகரெட் புகை, நம்மை ஏன் பாதிக்க வேண்டும் என்று தோன்றும்; கோபம் வரும். தடை செய்யப்பட்ட பகுதிகள் என்று இருந்தால் நமக்கு பாதிப்பு வராதே என்று நினைப்பேன். புகையிலை பொருட்களால் ஏற்படும் கேன்சர், வாய், தொண்டை, நுரையீரலை பாதிக் கும். நம் நாட்டில் பெரும்பாலும் பெண்கள் புகைப்பது இல்லை. பல வீடுகளில் ஆண்கள் வரவேற்பு அறையில் அமர்ந்து சிகரெட் பிடிப்பதால், வீட்டில் உள்ள பெண்களை பாதிக்கிறது.சிகரெட் பழக்கம் இல்லாமல் இருப்பதோடு, பழக்கம் இருப் பவர்களின்| அருகில் செ ல்லாமல் இருக்க என் னென்ன பாதுகாப்பு எடுத்துக்கொ ள்ள முடியுமோ, அதை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். எனக்கு தெரிந்த பெண்ணின் மாமனார், ஹாலில் அமர்ந்து தான் எப்போதும் சிகரெட் பிடிப்பார். அதனால் ஏற்படும் உடல்நல கேடுகளை பற்றி டாக்டர்கள் சொன்ன போது, 'எனக்கு வயசாயிடுச்சி; இருக்கிற வரை மகிழ்ச்சியாக இருந்து விட்டு போகிறேன்' என்று கூறி விட் டார். சுற்றி இருப்பவர்களை அதிகம் பாதிக்கும் என்பதை பற்றி அவர் கவலைப்படவில்லை. டாக்டர் தீபா ஹரிஹரன், பச்சிளங்குழந்தைகள் சிறப்பு மருத்துவர், சூர்யா மருத்துவமனை, சென்னை. 044 - 2376 1750nicu_deepa@yahoo.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்பாவி
ஜூன் 10, 2026 06:59

மெடல் யாருக்கு குத்த ப்போறிங்க?


ஜெகதீசன்
ஜூன் 10, 2026 00:28

ஏன் இந்த டாக்டருக்கு காற்று மற்றும் தண்ணீர் வழியாக உடலில் செல்லும் அபாயகரமான மைக்ரோ பிளாஸ்டிக், மெட்ரோ ரோடுகளில் அதிக அளவு வாகன புகை, உணவுகளில் கலக்கப்படும் நிறமிகள், மது பழக்கம், மற்றும் பரிசுத்த பழக்கங்கள் கொண்டவர்களுக்கு வரும் புற்றுநோய் பற்றி தங்கள் கட்டுரையில் குறிப்பிடவில்லையோ.


நிக்கோல்தாம்சன்
ஜூன் 08, 2026 04:28

மிகுந்த வலியான செய்தி இந்த passive ஸ்மோக்கிங், என்று தான் விடியும் நமக்கு


அப்பாவி
ஜூன் 07, 2026 10:35

நம்ம ரோடுகளில் நச்சுப் புகையை கக்கும் வாகனங்களை சொல்லாம உட்டீங்களே. நாலஞ்சு கார் போன எங்கள் தெருவில் இப்போ நிமிஷத்துக்கு 10 கார் பறக்குது. தெருவில் கோலம் போடறேன் பேர்வழின்ணு கிளாஸ் பவுடர கொட்டி அதான் துகள் சாக்கடையில் படிஞ்சு அடைச்சுக்கிது. வாகனங்கள் போகையில் தூசியாக் கெளம்புது. ஒண்ணுக்கு போகக்கூட டூ வீலர். அங்கங்கே நடுத்தருவில் நிறுத்தி பொருள் வாங்கி நாசமா போறாங்க. நடுவுல ஆட்டோக்காரன் ரோதன வேறே.