உறவு மேலாண்மை: தனிமையை கண்டால் பயம்
தம்பதியருக்கு திருமணமாகி, 10 ஆண்டுகள் ஆகின்றன. இருவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கின்றனர். தன்னுடைய உடல் நலம் தொடர்பாக, சில மகப்பேறு மருத்துவ ஆலோசனைகள் தேவைப்படவே, மனைவி, ஒரு மகப்பேறு மருத்துவரை சந்தித்து இருக்கிறார்.தாம்பத்திய வாழ்க்கை பற்றி சில கேள்விகளை டாக்டர் கேட்ட போது, சில ஆண்டுகளாக, தனக்கும், கணவருக்கும் இடையில், சுமூகமான உறவு எதுவுமில்லை என்று சொல்லி, ஆதங்கத்தை கொட்டியிருக்கிறார். வாழ்க்கையில் சில தீர்மானங்களை எடுப்பதற்கு முன், மனநல ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவது நல்லது என்று சொல்லி, என்னிடம் அனுப்பினார்.அந்த பெண் என்னை சந்தித்தவுடன், எதிர்பார்க்காத சமயத்தில் வேலையிலிருந்து, வி.ஆர்.எஸ்., வாங்கிட்டு வந்துட்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. வீட்டைவிட்டு வெளியில் செல்ல தயங்குகிறார். எதற்கெடுத்தாலும் பயம்; தனியாக இருக்கவே பயம். சின்னச் சின்னதாக நிறைய உடல் பிரச்னைகள் வேறு சொல்கிறார். சரி, வேலையை விட்டு விட்டார். ஏதாவது தொழில் செய்யட்டும் என்று, என் உறவினர்களிடம் பணம் ஏற்பாடு செய்து கொடுத்தேன். அதிலும், அவரால் முழுதாக கவனிக்க முடியாமல், போட்ட பணம் எல்லாம் நஷ்டம். இப்போது, நான் வேலைக்கு போயே ஆக வேண்டிய கட்டாயம். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பேசாமல், என் வழியில் தனியாகப் போய் விடலாம் என்று தோன்றுகிறது. இரு குழந்தைகளின் எதிர்காலம் நினைத்தால், பயமாக உள்ளது என்றார். ஒரு பொறுப்பான அம்மாவிற்கே உரிய கவலை அவர் குரலில் தெரிந்தது.அவரது கணவரிடம் பேசிய போது, அவர் வளர்ந்த சூழல் தான், அவரை இப்படி பயப்பட வைக்கிறது என்பது புரிந்தது. ஒரு சிறிய கிராமத்தில் பெற்றோரின் பாதுகாப்பில் வளர்ந்திருக்கிறார். வீடு, அப்பா, அம்மா இதுதான் அவரின் உலகம். வெளி உலகமே பாதுகாப்பற்றது என்று, எதிர்மறையாகவே, அவரின் அம்மா சொல்லி ரொம்ப கவனமாக வளர்த்திருக்கிறார். நகர வாழ்க்கையில், அவரால் இயல்பாக ஒன்றிப் போக முடியவில்லை. இயலாமை, தாழ்வு மனப்பான்மை, சுயபச்சாதாபம், மனைவியின் சம்பாத்தியத்தில் வாழ்கிறோம், அவர் கொடுத்த பணம் எல்லாம் நஷ்டம் என்று, எல்லாம் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக அவரை, 'சைக்கோ'வாக மாற்றி விட்டது. முதலில், மனைவிக்கு புரிய வைத்தேன். எதற்காக அவருக்கு பிரச்னை ஏற்பட்டது என்பதை விளக்கி, அவரை ஒத்துக் கொள்ள வைத்தேன். இதை கண்டுகொள்ளாமல், புரிந்து கொள்ளாமல் விட்டு விட்டால், காலப் போக்கில் சைக்கோவாக மாற வாய்ப்பு உண்டு என்பதை தெளிவுபடுத்தினேன்.கணவருக்கு கவுன்சிலிங்கோடு சேர்த்து, ரிலாக்ஸ்சேஷன் தெரபி, உடல் தளர்வு பயிற்சி, குடும்ப கவுன்சிலிங் உடன் கணவருக்கு நடத்தை மாற்றுப் பயிற்சியும் கொடுக்கிறேன். நல்ல முன்னேற்றம் தெரிகிறது.என்.ரஹ்மான்மனநல ஆலோசகர்90422 36393