உள்ளூர் செய்திகள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

1குறைமாத பிரசவம் என்பது என்ன?முழுமையான கர்ப்ப காலம் என்பது 40 வாரங்கள். 37 வாரங்களுக்கு முன்பு நடக்கும் பிரசவங்களை, குறைமாத பிரசவங்கள் என்கிறோம். அதிலும், 33 வாரங்களுக்கு உட்பட்டு பிறக்கும் குழந்தைகளை அதிதீவிரமாக கண்காணிக்க வேண்டும். காரணம், எடை குறைவால், உள் உறுப்புகள் முழுமையாக வளர்ச்சியடைந்து இருக்காது.2பிரசவ நாளுக்கு முன்பே குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?சிசுவை சூழ்ந்துள்ள மென்சவ்வான பனிக்குடம் வெடிப்பது, தாயின் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், முந்தைய குறை பிரசவ நிகழ்வு, உயர் ரத்த அழுத்தம், கர்ப்பகால சர்க்கரை, மன உளைச்சல், மரபணு குறைபாடுகள் உள்ளிட்ட காரணங்கள், குறைபிரசவத்துக்கு காரணமாகலாம்!3 தாயின் உடல் எடை, குறைபிரசவத்திற்கு காரணமாகுமா?கர்ப்பத்திலிருக்கும்போது, தனக்குத் தேவையான சத்துக்களை, தாயிடமிருந்துதான் குழந்தை எடுத்துக் கொள்ளும். இதனால், தாயின் உடல் எடை, 40 கிலோவிற்கு குறையாமல் இருப்பது நல்லது. இதில் பிரச்னை நிகழும்போது, குறைபிரசவம் நிகழ வாய்ப்புண்டு!4 குறைமாத பிரசவத்திற்கான காரணிகள்?போலிக் அமிலம், வைட்டமின் பி மற்றும் சி குறைவு, ரத்தசோகை, தைராய்டு பிரச்னை, கர்ப்ப கால உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரகப்பாதை தொற்று உள்ளிட்ட பிரச்னைகள் குறைபிரசவத்திற்கு முக்கிய காரணிகள்!5 முதல் பிரசவம் குறைப்பிரசவம் எனும்போது, அடுத்த பிரசவமும் அப்படித்தானா?முதல் பிரசவ சமயத்தில், கர்ப்பகால சர்க்கரை இருந்து, இரண்டாவது பிரசவத்தில் இக்குறைபாடு தொடர நேரிட்டாலும், ஹார்மோன்களில் சமநிலையற்ற நிலை நீடித்தாலும், முதல் பிரசவம் போல் இரண்டாவது பிரசவமும் குறைபிரசவமாக அமைய வாய்ப்பிருக்கிறது.6 குறைமாத குழந்தைகளுக்கும், இன்குபேட்டருக்கும் உள்ள தொடர்பு என்ன?பொதுவாக, 32 வாரத்திலேயே பிறந்த குழந்தைகளை, சராசரி எடையான இரண்டரை கிலோ வரும்வரை, சீரான உடல் வெப்பநிலைக்காகவும், எளிதில் நோய் தொற்று பாதிக்காமல் பாதுகாக்கவும், இன்குபேட்டரில் வைத்து பராமரிப்பது அவசியம்.7 குறைமாத பிரசவங்களை தடுப்பது எப்படி?தாய்மை அடைந்த பெண் உண்ணும் உணவில், இரும்புச்சத்து, வைட்டமின் சி, கால்சியம் போன்ற சத்துக்கள் இருக்குமாறும், கர்ப்பகால சர்க்கரை தாக்காதவாறும், ஹார்மோன் சமநிலையற்ற தன்மை உருவாகாதவாறும் பார்த்துக் கொண்டாலே போதுமானது!8 குறைமாத குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைப்பது சாத்தியமா?குறைமாத பிரசவம் என்றாலும், சில பெண்களுக்கு, பால் சுரப்பிகள் தானாக செயல்பட துவங்கிவிடும். சிலருக்கு ஊசி போட்டு, துாண்ட வேண்டும். எதுவாக இருந்தாலும், தானியங்கள், முளைகட்டிய பயிறு வகைகள், உலர் பழங்கள், பால், கேரட், பீட்ருட், கீரை, மீன் உள்ளிட்ட உணவுகள், நன்றாக தாய்ப்பால் சுரக்க வைக்கும்.9 தைராய்டு பிரச்னைக்கும், குறைபிரசவத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?தைராய்டு பிரச்னை என்றாலே, ஹார்மோன் குறைபாடுதான்! ஹார்மோன் சமநிலையற்ற தன்மை நீடிக்குமானால், முதல் மற்றும் இரண்டாவது பிரசவங்கள் அறுவை சிகிச்சையிலேயே சாத்தியப்படும்! ஹார்மோன் சமநிலை மட்டுமே, இப்பிரச்னையை தடுக்கும்!10குறைமாத பிரசவ குழந்தைகளை தீண்டும் பிரச்னைகள்?இக்குழந்தைகளுக்கு நுரையீரல் முழு வளர்ச்சி அடைந்திருக்காது என்பதால், மூச்சு திணறல், மஞ்சள் காமாலை, தொற்றுநோய்கள், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல், ரத்த ஓட்டம் தடைபடுதல் மற்றும் மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் குறைவதால், மூளை வளர்ச்சி தடைபடுதல் உள்ளிட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு!- தேன்மொழி, பச்சிளம் குழந்தைகள் நல மருத்துவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்