உள்ளூர் செய்திகள்

மாத்தியோசி:

ஒரு முறை தோன்றினால் மீண்டும் தோன்றாதா?

வயதானவர்களுக்குத் தான் சிறுநீரகத்தில் கல் ஏற்படும். தவறு. இந்த நோய், 20 வயதுக்கும், 40 வயதுக்கும் இடைப்பட்ட ஆண்களுக்கு ஏற்படுகிறது. எல்லா கற்களும் ஒரே மாதிரி தான். எளிதில் கரையும். தவறு. சிறுநீரகக் கற்களுள், 90 சதவீத மானவை கால்சியம் ஆக்சலேட், கால்சியம் பாஸ்பேட் உப்புகளால் ஆனவை. 10 சதவீதமானவை யூரிக் அமிலக் கற்களாகும். வயிற்றில் வலி ஏற்பட்டாலே, 'கிட்னி ஸ்டோன்' பிரச்னை தான். இல்லை. நடுமுதுகுப் பகுதியில் ஆரம்பிக்கும் வலி, அடிவயிறு, இடுப்பு, எனப் பரவும். நீர்க் கடுப்பு, வாந்தி, வயிறு உப்புசம் ஏற்படும்.கல்லை நீக்கி விட்டால், மீண்டும் தோன்றாது.

ஒருவருக்கு சிறுநீரகக் கல் ஒருமுறை தோன்றினால், மீண்டும் உருவாவதற்கான சாத்தியம் உண்டு. இரண்டாவது முறையும் சிறுநீரகக் கல் தோன்றினால், மீண்டும், மீண்டும் கற்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. சிறுநீரகக் கல்லின் தன்மையைப் பொறுத்தே, சிகிச்சை அமையும். எனவே, சிறுநீரகக் கற்களால் பாதிப்புக்குள்ளான ஒருவர், தனக்குத் தோன்றிய சிறுநீரகக் கல் எந்த வகையைச் சேர்ந்தது என்பதை, அறிந்து கொள்வது அவசியம்.

உப்பைக் குறைத்தால், கல் ஏற்படாது. உடலில் நீர்ச் சத்து குறைந்தால், சிறுநீர் வெளியேறும் அளவு குறையும். நாட்பட்ட பாதிப்பு ஏற்படின், சிறுநீரகக் கற்கள் தோன்றும். கல் மீண்டும் உருவாகாமல் தடுக்க, தண்ணீரை நிறையக் குடிப்பதே ஒரே தீர்வு. கற்களைத் தோற்றுவிக்கும் காரணிகளைக் குறைத்து, சிறுநீரகக் கல் உருவாகாமல் தடுப்பதற்கு, தண்ணீர் உதவுகிறது. நாள் ஒன்றுக்கு, இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள் என்பதை விட, எவ்வளவு சிறுநீர் வெளியேறுகிறது என்பதே முக்கியம்.

மிகினும், குறையினும் பிரச்னை: சிறுநீரகக் கல் தோன்றாமல் இருக்க உதவுவது, வைட்டமின் ஏ சத்து. கேரட், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பூசணிக்காய் உள்ளிட்டவற்றில், வைட்டமின் ஏ சத்து அதிகம். உடலில், அளவுக்கு அதிகமாக புரோட்டீன் சத்தும், வைட்டமின் டி சத்தும் அதிகரித்தால், கல் தோன்றும். புரோட்டீன், வைட்டமின் டி சத்து அளவு அதிகரிக்கும்போது, பாஸ்பரஸ், யூரிக் ஆசிட், சுண்ணாம்புச் சத்து ஆகியவை உடலில் அதிகரிக்கும். அப்படி அதிகரிக்கும்போது, அவை நாளடைவில் கல்லாக மாறி விடும். எனவே, புரோட்டீன் அதிகம் உள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

இதயத்தை காக்க மருந்து போதுமா?: இதய நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மருந்துகளின் பங்கு 40 சதவீதம் தான். நமது வாழ்க்கை முறை, மனநிலை, ஆரோக்கிய உணவு ஆகியவற்றின் பங்கு 60 சதவீதம். தீவிர மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு வருபவர்களில் 40 சதவீதம் பேர் மட்டுமே காப்பாற்றப்படுகின்றனர்.

மாரடைப்புக்கான அறிகுறிகள்: நெஞ்சில் பலமாக அழுத்துவது போன்ற உணர்வு, சிலருக்கு நடு மார்பில் எரிச்சல் இருக்கும் உணர்வு, இந்த வலி சிலருக்கு, நெஞ்சின் மையப் பகுதியில் துவங்கி இடது கை, தொண்டைக்கு பரவும். சில நேரங்களில், வலது கைக்கு, அரிதாக வயிற்றுக்கும் பரவும். வலி ஏற்படும்போது உடல் வியர்த்துக் கொட்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !