திர்யங்க புஜங்காசனம்
செய்முறை:௧. விரிப்பில் கவிழ்ந்த நிலையில் படுக்க வேண்டும்௨. கால்களின் கட்டை விரல்கள், தரையில் ஊன்றியும், குதிகால்கள் உயர்த்தியும் இருக்க வேண்டும்௩. உள்ளங்கைகளை தோள்பட்டையின் கீழே வைத்து, முழுங்கைகள் உடலை ஒட்டியவாறு இருக்க வேண்டும்௪. இப்பொழுது மூச்சை இழுத்துக் கொண்டே மெதுவாக தலை, கழுத்து மற்றும் நெஞ்சினை மேலே உயர்த்திய பின், வலது பக்கம் திரும்பி, இடது குதிகாலை பார்க்க வேண்டும்௫. திரும்பி பார்க்கும் போது, இடுப்பு பகுதியையும் சேர்த்து திருப்ப வேண்டும்௬. ஆழ்ந்த சுவாசத்தில் சிறிது நேரம் இருந்து, பின் முகத்தை நேராகக் கொண்டு வந்து மேல் நோக்கி பார்க்க வேண்டும்௭. பின் இடது பக்கம் பார்க்க வேண்டும்௮. இவ்வாறு நான்கு அல்லது ஆறு முறைகள் செய்யலாம். ஒவ்வொரு முறையும், ௩௦ல் இருந்து, ௪௦ வினாடிகள் வரை செய்ய வேண்டும்.குறிப்பு:குடல் இறக்கம், குடல்புண், தைராய்டு பிரச்னை உள்ளோர், யோக ஆசிரியரின் ஆலோசனையின் அடிப்படையில் செய்ய வேண்டும்.பலன்கள்:௧. முதுகுத் தண்டு நன்கு முறுக்கப்படுவதால், முதுகுப் பகுதிக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது ௨. முதுகுப் பகுதி நரம்புகள் நன்கு தூண்டப்படுகின்றன ௩. மாதவிடாய் கோளாறுகள் தீர்க்கப்படுகின்றன௪. சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நன்கு வேலை செய்கின்றன௫. வாயுத் தொல்லை நீங்குகிறது.- ரா.சுதாகர், திருமூலர் பிரபஞ்ச யோகா மையம், சென்னை. 97909 11053