உள்ளூர் செய்திகள்

சர்க்கரை நோய் வராமல் தடுக்க... உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி

'என் உறவினர், 75 வயது வரை வாழ்ந்து, விபத்தில் இறந்து விட்டார். அவருக்கோ, அவரை சார்ந்தவர்களுக்கோ சர்க்கரை நோய் இல்லை. அவரது இரு பிள்ளைகளுக்கும், தொழில் பாதிப்பால் குழப்பம் அடைந்து, 45 வயதுக்கு மேல் சர்க்கரை பாதிப்பு வந்தது. அவர்களது குழந்தைகளுக்கும், இந்நோய் வர வாய்ப்புள்ளதா? தவிர்க்க என்ன செய்யலாம்?'- இப்படி ஒரு கேள்வியை, ஆனைமலையைச் சேர்ந்த, வசந்த்ராஜ் எழுப்பி உள்ளார்.கேள்வியை அப்படியே, சென்னை அரசு பொது மருத்துவமனை, சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர் பெரியாண்டவரிடம் முன் வைத்தோம். அவர் அளித்த பதில்: அவர்களது குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு வர வாய்ப்புள்ளது. பொதுவாக, மன அழுத்தம் வராமல் பார்த்துக் கொள்வதோடு, உணவு கட்டுப்பாடும் மிகவும் அவசியம். மேலும், 'பாஸ்ட்புட்', 'ஜங் புட்' போன்ற உணவுகளை சாப்பிடுவதல், குளிர்பானங்கள் அருந்துவதையும் கைவிட வேண்டும்; அதற்கு மன பயிற்சி முக்கியம்.அத்துடன், முன்னெச்சரிக்கையாக உடல் பயிற்சிகளையும் தொடர்ந்து செய்து வந்தால், சர்க்கரை நோய் பாதிப்பு வராமல் தடுக்க முடியும். இவ்வாறு, பெரியாண்டவர் விளக்கம் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !