உள்ளூர் செய்திகள்

கருப்பை காக்கும் "நாவல்

மனிதர்களது வாழ்வில், ஒருமுறை வந்துவிட்டால் தீராது பின்தொடரும் நோய்களில் ஒன்று நீரிழிவு நோய். இதற்கு, ஆதித்தமிழ் மரபிலேயே நாவற்பழம் சிறந்த தீர்வாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேபோல பெண்களின் கருப்பை காக்கும் கவசமாகவும் நாவல் பழங்கள் திகழ்கின்றன.நாவல் பழங்கள் நோய்களை துரத்தும் அருமருந்தாக இருப்பதை நமது மூதாதையர் கண்டுள்ளனர்.நாவல் பழத்தில், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, வைட்டமின் பி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உவர்ப்பு சுவையோடு இனிப்பு கலந்து, அருஞ்சுவையாய் நம் மை அசரடிக்கும். நீரிழிவுநோய், சரும நோய்கள், உடல் சூடு தடுக்கும் வல்லமை நாவல் பழங்களுக்கு உண்டு. ஞாபகசக்தி அதிகரிக்கவும் இந்தப் பழம் பரிந்துரைக்கப்படுகிறது.சிறுநீரகத்தை சீராக செயல்பட வைப்பதுடன் மலச்சிக்கலையும் போக்கும். மூலநோய் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நோயின் தாக்கம் குறையும்.நாவற்பழங்கள் மட்டுமின்றி, நாவல் மரத்தின் பாகங்களும் கூட, அருமையான மருத்துவ குணங்கள் கொண்டவை தான். நாவல் பட்டையை இடித்து, நீர் விட்டு அந்தப் பட்டையை கொதிக்க விடவேண்டும். அந்தக் கொதிநீரை வடிகட்டி, அருந்தி வந்தாலும் நீரிழிவு குணமாகும்.பெண்களுக்கு கருப்பை குறை பாடுகளை போக்கவும், நாவற்பழங்களும், நாவற்பழ பட்டையை கொதிக்க விட்ட நீரும் பயன்படுகிறது.ஏராளமான நாவற்பழ வகைகளில், தற்போது ஒருசில வகைகளே சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்றன. கூடுமானவரை நாவற்பழங்களை தேடித்தேடி உண்டால், தெவிட்டாத இன்பத்தை நம் வாழ்வில் காணலாம். என்ன வாசகர்களே, நாவற்பழங்களை வாங்க கூடையோடு கிளம்பி விட்டீர்கள்தானே?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்