காய்ச்சலுடன் நடை பயிற்சியா?
ஸ்டெல்லா, நாசரேத்: நான், தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்கிறேன். காய்ச்சல், உடல்வலி இருந்தால், அதைப் பொருட்படுத்தாமல், நடைப் பயிற்சி மேற்கொள்கிறேன். இது, சரிதானா?தினசரி நடைபயிற்சி உடலுக்கு பலவகைகளில் நன்மை அளிக்கிறது. குறிப்பாக, ரத்த அழுத்தத்தையும், ரத்தத்தில் சர்க்கரை அளவையும் கட்டுப்பாட்டில் வைக்கிறது. ரத்தக் குழாய் நோய்கள் வராமல் தடுக்கிறது. இது மட்டுமின்றி, மனதுக்கும், பல வழிகளில் நன்மை அளிக்கிறது. இருப்பினும், தினசரி, நம் உடலுக்கு குறைந்தபட்சம் ஏழு மணி நேரம் தூக்கம் மற்றும் ஓய்வு அவசியம். காலதாமதமாக தூங்கினால், தாமதமாக நடைப் பயிற்சி மேற்கொள்ளலாம். ஆனால் காய்ச்சல், உடல்வலி இருந்தால், அன்று, நடைப்பயிற்சியை தவிர்ப்பது நல்லது.