உள்ளூர் செய்திகள்

நாங்க இப்படிதானுங்க! 13 மாடிகள்... பக்கா பிட்

ரொம்ப குறைவாக சாப்பிடுவது தான் என், 'பிட்னெஸ்' ரகசியம். கார்போ ஹைட்ரேட் எவ்வளவு குறைவாக இருக்க முடியுமோ, அவ்வளவு குறைவாக இருப்பதை போல் பார்த்துக் கொள்வேன். சப்பாத்தி, சாதம் சாப்பிடுவதை, நான் விரும்புவது இல்லை; அதற்கு பதிலாக, வேக வைத்த காய்கறிகள், பச்சை காய்கறிகள், வேக வைத்த சிக்கன் நிறைய சாப்பிடுவேன். வெளியில் சாப்பிடும் போது, சாப்பாட்டிற்கு பின், ஐஸ் கிரீம், பேஸ்ட்ரி, இனிப்பு வகைகள் எவ்வளவு உயர் தரமாக இருந்தாலும், தொடவே மாட்டேன். என், 'டயட்'டில் எண்ணெயும் குறைவாகவே இருக்கும். எந்த வேளையும் உணவை தவிர்க்க மாட்டேன். சரியான நேரத்திற்கு, குறைவான அளவு உணவை சாப்பிட்டு விடுவேன்.என் உயரம், 5.9 அடி. என் உயரத்திற்கு ஏற்ற, 64 கிலோ உடல் எடையை, எப்போதும் சரியாக பராமரிப்பேன். சத்தான, ஆரோக்கியமான உணவை தேர்வு செய்வதில், கவனமாக இருப்பேன். 'வொர்க் - அவுட்' என வரும் போது, பெரிதாக எதுவும் செய்வதில்லை. ஆனால், ஒரு விஷயத்தில் கவனமாக இருக்கிறேன். என் வீடு இருப்பது, 13வது மாடியில். ஏறுவதற்கும், இறங்குவதற்கும், தினமும் ஒருமுறை, கண்டிப்பாக படிகளையே பயன்படுத்துகிறேன்.- நேத்ரா ரகுராமன், மாடல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !