நாங்க இப்படிதானுங்க!: தினம் ஒரு பாகம்!
தினம் ஒரு சமையல் செய்வதைப் போல, தினம் ஒரு உடற்பயிற்சி செய்யும் ஒரே நடிகர், ஹிருத்திக் ரோஷனாகத் தான் இருப்பார். திங்கட் கிழமை, மார்பு, ஆடுதசைகள், முதுகு; செவ்வாய், கால்களுக்கு; வியாழன், தோள்களுக்கு; வெள்ளிக் கிழமை கைகளின் பலத்திற்கு தேவையான பயிற்சிகள் செய்கிறார். மீதி இருக்கும் மூன்று நாட்கள், மொத்த உடம்பிற்கும் பலன் தரக் கூடிய, 'வொர்க் - அவுட்-' செய்கிறார்.ஒரே மாதிரியாக உடற்பயிற்சி செய்வதை விட, உடம்பிற்கு என்ன தேவையோ, அதற்கேற்ப செய்வது தான், பலன் தரும் என்பது, இவரின் அனுபவம். 'என்ன தான் திட்டமிட்டு வொர்க் - அவுட் செய்து, ஆரோக்கியமாக சாப்பிட்டாலும், 'ஸ்ட்ரெஸ்' இல்லாமல் இருக்க வேண்டியது முக்கியம்' என்கிறார். மனதளவில் வலிமையாக இருப்பது தான், உண்மையான, 'பிட்னெஸ்' என்பது, ஹிருத்திக்கின் பார்முலா!- ஹிருத்திக் ரோஷன், பாலிவுட் நடிகர்