உள்ளூர் செய்திகள்

நாங்க இப்படிதானுங்க! என் அழகின் ரகசியம்!

வெளித் தோற்றத்தில் அழகாக தெரிவதற்கு செய்யும் முயற்சிகளை விட, 'நான் அழகாக இருக்கிறேன்' என, முழுமையாக நம்பினால் மட்டுமே, நம் தனித்தன்மை முழுமையாக வெளிப்படும். இந்த உணர்வே நேர்மறையான எண்ணத்தையும், தன்னம்பிக்கையையும் தரும் என்பது, என்னுடைய அனுபவ பாடம். 'இயல்பிலேயே அழகாக இருப்பவர்கள் மட்டுமே, சினிமா நட்சத்திரங்களாக இருக்க முடியும்' என, தவறாக நினைக்கின்றனர்; அப்படி இல்லை. எனக்கு கிடைத்த, 'டிரீம் கேர்ள்' பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள, 50 ஆண்டுகளாக உணவு, உடற்பயிற்சி என, அனைத்திலும் கவனமாக உள்ளேன். இந்த, 69 வயதிலும், 'அசல் வயதைக் காட்டிலும், 20 ஆண்டுகள் இளமையாக தெரிகிறீர்கள்; உங்கள் அழகு, 'பிட்னெஸ்' ரகசியம் என்ன?' என்று, தினமும் எனக்கு கேள்விகள் வருகிறது. இதில் ரகசியம் ஒன்றும் இல்லை. நம் உண்மையான தேவை என்ன என்பதை புரிந்து, ஒரு ஒழுங்கு முறையை பின்பற்றினால் போதும். அழகாக இருக்கலாம்.டி.ஹேமமாலினி, நடிகை, டான்சர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்