நாங்க இப்படிதானுங்க!: நடிக்க வந்ததால் தப்பினேன்!
சின்ன வயசுல ரொம்ப குண்டா, 'புஸ்'சுன்னு இருப்பேன். எங்க அம்மா, 'நல்ல வேளை நீ நடிகனா ஆயிட்டே... இல்லைன்னா உன், 'ஹெல்த்' என்ன ஆகியிருக்கும்னு தெரியாது'ன்னு சொல்வாங்க... நான் இருந்திருப்பேனான்னே கூட சந்தேகம்... அந்த அளவு மோசமாக இருந்தது, என் உடம்பு.அப்பா, அண்ணன் இரண்டு பேரும், 'பிட்னெஸ்'ல முன்னுதாரணமா இருந்தாலும், நான் அப்படி இல்லை. என்னோட உணவுப் பழக்கம் ரொம்ப மோசமாக இருந்தது. தண்ணி, தம் அடிக்க மாட்டேன்; ஆனால், நேரம் தவறி சாப்பிடுவேன். நேரங்கெட்ட நேரத்தில் துாக்கம்... சிஸ்டத்திலேயே உட்கார்ந்து இருப்பேன். அமெரிக்காவில் இருந்து வந்த போது, படுத்தா, உடனே எழுந்திருக்க முடியாது; முதுகு இறுக்கமாக இருக்கும். நடிக்க ஆரம்பித்த பின், நிறைய பயிற்சி செய்தேன். எடை குறைத்த பின், என்னோட தினசரி ஒழுங்கு, மெட்டபாலிசம் எல்லாமே மாறிடுச்சி!- கார்த்தி சிவகுமார், நடிகர்