உள்ளூர் செய்திகள்

தண்ணீருக்குள் எமன்!

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் கூறுவார்கள். ஆனால், நம் சுற்றுச்சூழலும், வாழ்க்கை முறையும் அதற்கு நேர்மாறாக இருக்கிறது. உண்மையில் நாம் குடிக்கும் தண்ணீர் சுத்தமானதாக இல்லை என்பதுதான் கொடுமை. பலமுறை பயன்படுத்தப்பட்ட கேன்களை கழுவாமல், மீண்டும் மீண்டும் அதிலேயே தண்ணீர் சப்ளை செய்வது, மறுசுழற்சிக்கு பயன்படாத 'ப்ளாஸ்டிக்' கேன்களை பயன்படுத்துவது உள்ளிட்ட காரணங்கள் நோய்களை ஏற்படுத்தும்.இதை தவிர்க்க, தண்ணீரை சப் - டீலர்களிடம் இருந்து வாங்கக்கூடாது. காரணம், அவர்கள் கலப்படம் செய்ய நிறைய வாய்ப்புகள் உண்டு. மேலும், நாம் வாங்கும் வாட்டர் கேனில் பேட்ச் நம்பர், எம்.ஆர்.பி., விலை, மற்றும் காலாவதியாகும் நாள் உள்ளிட்ட விவரங்கள் தெளிவாக இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும்.பொதுவாக, 'பிளாஸ்டிக்' டப்பாவிலிருந்து வெளியேறும் 'கார்ஸினோஜின்' எனும் ரசாயனம், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது. மேலும், இந்த ரசாயனத்தால் நமது ஜீரணமண்டலமும் பாதிக்கப்படும். இந்த பிரச்னை, வீட்டிற்கு வரும் கேன்களில் மட்டுமல்ல; ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் கொண்ட மினரல் வாட்டர் பாட்டில்களிலும் உண்டு.'பாட்டில் கூட தண்ணீரை தரமற்றதாக்கிவிடும்' ஆபத்து இருப்பதால், அவற்றை வாங்கும்போது விழிப்புணர்வு அவசியம். பொதுவாக, பாட்டிலின் அடிப்பகுதியில் முக்கோணத்திற்குள் இருக்கும் எண்களை பொறுத்துதான் பாட்டிலின் தரம் இருக்கும். 1 - 4 வரையிலான எண்கள் கொண்ட பாட்டில்கள் உபயோகிக்க ஏற்றதல்ல! 4க்கு மேலான எண்கள் கொண்ட பாட்டில்களே பயன்பாட்டிற்கு ஏற்றது.- முருகன் நுகர்வோர் வழக்கறிஞர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்