உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / நிஜக்கதை / சேலம் வேலை இல்லாத பட்டதாரிகள் கடை ஒரு பார்வை...

சேலம் வேலை இல்லாத பட்டதாரிகள் கடை ஒரு பார்வை...

சேலம் வேலை இல்லாத பட்டதாரிகள் கடை ஒரு பார்வை...சேலர் டவுன் ரயில்வே நிலையம் பக்கத்தில் உள்ள செரி ரோட்டின் மத்தியில் உள்ள ஒரு மாடி படியின் கீழ் சிறிய அளவில்'வேலை இல்லாத பட்டதாரிகள் கடை' என்ற பெயரில் சிறிய பிளக்ஸ் போர்டு தொங்கிக்கொண்டு இருக்கிறது.பெயர் வித்தியாசமாகவே இருக்கவே போர்டு காட்டிய வழியில் மாடிக்கு சென்ற போது பெரியவர் ஒருவர் அன்புடன் வரவேற்றார்.பெயர் ராமன்,வயது 72 அவர்தான் அந்த கடையின் முதலாளி தொழிலாளி எல்லாம்.கடையில் ஸ்கூல் பேக்,பெல்ட்,பட்டாசு,செருப்பு போன்றவைகள் விற்பனையாகிறது.ஒரு இளைஞரைப் போல சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டு இருக்கிறார்.பேக்,பெல்ட்,பர்ஸ் வாங்குபவர்களிடம் அதை எப்படி பராமரிப்பது என்பதற்காக கையேடு ஒன்றையும் வழங்குகிறார்.கூடவே நோய்களுக்கு நோ சொல்லுங்கள் என்ற தனது அனுபவ குறிப்புகளையும் வழங்குகிறார்.சுறுசுறுப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான காரணம் இயற்கை உணவுகள்தான், சமைக்காத காய்கறி உணவுகளை விரும்பி எடுத்துக்கொள்வேன் என்றவர் அது தொடர்பான வாசகங்களை கடை முழுவதும் தொங்கவிட்டுள்ளார்.ராமனிடம் பேசிப்பெற்ற விஷயங்களாவதுமுப்பத்தைந்து வருடத்திற்கு முன் படித்து முடித்தவர்களுக்கு வேலை கிடைப்பது மிகவும் சிரமமான விஷயம் அப்படியே கிடைத்தாலும் அது குறைந்த வருமானமாகவே இருந்தது.இந்த நிலையில்தான் என்னுடன் கல்லுாரியில் படித்த நண்பர்களுடன் பேசி நாமே சுயமாக ஏதாவது தொழில் செய்து சம்பாதிப்போம் என்று முடிவு செய்தோம்.செய்யும் தொழிலில் வேலை இல்லாத பட்டதாரிகள் முழு நேரமாகவும், வேலை பார்த்து சம்பாத்தியம் போதாது என்று நினைப்பவர்கள் பகுதி நேரமாகவும் தொழில் பார்த்து வரக்கூடிய வருமானத்தை பிரித்துக் கொள்வது என்று முடிவு செய்தோம்.நாம் செய்யக்கூடிய தொழிலில் எதுவாக இருந்தாலும் அதன் தரம் பேசப்படவேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தோம்.அப்படித்தான் பேக் தயாரித்து விற்பனை செய்தோம் பின்னர் தோல் தொடர்பான பெல்ட்,பர்ஸ்,செருப்பு போன்றவைகளை விற்பனை செய்தோம் இது தவிர சீசன் பிசினசாக பட்டாது விற்பது போன்றவைகள் விற்றோம்.எங்களது பேக்கில் கூடுதலாக சிப் இருக்கும் பள்ளிக்குழுந்தைகளுக்கான பேக்கில் வாழ்க்கைக்கு தேவையான செய்திகள் இருக்கும் ஒரு பேக் ஐந்து வருடம் ஆறு வருடகாலத்திற்கும் மேலாக உழைக்கும்.தரமாகவும் விலை நேர்மையாகவும் இருந்ததால் நன்றாக விற்பனையானது.என்னதான் வியாபாரியாக மாறினாலும் படித்த படிப்பிற்கு ஏற்ப வேலை கிடைக்காமல் போனதே என்ற ஏக்கம் சிலருக்கு இருந்தது அவர்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுத்தந்தோம்.வேலை கிடைத்தவர்கள் வியாபாரத்திற்கு வராததாலும், விரவிருப்பம் இருந்தாலும் வேறு ஊருக்கு மாறுதலானதாலும், இங்கே தொழில் கற்றவர்கள் தனியாக தொழில் நடத்தச் சென்றதாலும் வேலை இல்லாத பட்டதாரிகள் கடையில் ஆட்கள் குறைந்து கொண்டே போய் இன்றைய தேதிக்கு நான் மட்டுமே கடைசியாக இருக்கிறேன்.நான் நல்ல நிலையில் இருக்கும் போதே நல்ல காரியம் செய்திட விரும்புவதால் என்னிடம் நீண்ட காலம் உதவியாளராக இருப்பவரிடம் இந்த கடையை ஒப்படைத்துவிட்டு ஒய்வு பெறப்போகிறேன் என்றார்.அதிகம் பேருக்கு தெரியாத இன்னோரு முகம் உண்டு எனக்கு உண்டுஅது நான் ஒரு பங்கு சந்தை வியபாரி என்பதுதான்.ஒரு மாதத்தில் எட்டு லட்ச ரூபாய் நஷ்டமடைந்நதும் உண்டு அடுத்த மாதத்தில் ஒன்பது லட்ச ரூபாய் லாபம் பெற்றதும் உண்டு.கடந்த முப்பது வருட அனுபவம் இருக்கிறது என்றவர் டாடா குழுமத்தில் நடக்கும் பிரச்னையால் பங்கு மார்கெட் என்னவாகும் என்று ஆரம்பித்து பட்ஜெட்டிற்கு முன் எந்தந்த பங்கு கூடும் குறையும் என்பது வரை புள்ளிவிவரத்துடன் பேசுகிறார்.பெண்கள் சீரியல் பார்ப்தைவிட்டு பங்கு சந்தை மார்கெட்டில் ஈடுபட்டால் பெரிதும் பயன்கிடைக்கும், என் அனுபவங்கள் அனைத்தையும் இலவசமாகவே சொல்லித்தர விரும்புகிறேன், ஒரு குழுவாக அணுகினால் நல்லது என்று சொல்லி அடுத்த லெவலுக்கு தயராகும் சேலம் ராமனிடம் பேசுவதற்கான எண்:9688962636.(நேரம் மாலை 5-7)எல்.முருகராஜ்dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை