சுற்றுச்சூழலுக்கு உதவும் வாடகை சைக்கிள் திட்டம்
பெட்ரோலியப் பயன்பாட்டால் ஏற்படும் சூழல் சீர்கேட்டை குறைக்கும் ஒரு திட்டத்தை, மும்பை - தாணே நகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. தாணே நகரின் பல்வேறு பகுதிகளில் மிதிவண்டி நிலையங்கள் திறக்கப்படும். வீட்டிற்கு அருகிலுள்ள மிதிவண்டி நிலையத்திலிருந்து ஒரு வண்டியை எடுத்துக்கொண்டு, கல்லூரி அல்லது அலுவலகம் செல்லலாம். அருகில் உள்ள மிதிவண்டி நிலையத்தில் வண்டியை ஒப்படைத்து, வாடகையையும் கொடுத்துவிட்டால் போதும் என்பதே இந்தத் திட்டம். இதன் மூலம் பெட்ரோலைக் கொண்டு இயங்கும் இருசக்கர வாகனங்களின் பயன்பாட்டைப் பெருமளவு குறைக்க முடியும் என்பது இவர்களின் திட்டம். முதற்கட்டமாக 100 மிதிவண்டிகள் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, நகரெங்கும் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களின் அருகில் நிறுத்தப்படும் என்று நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. வாடகை செலுத்த ஸ்மார்ட் கார்டு வசதியும் உண்டு