மோக்ஸ்ட்ராவுக்கு அங்கீகாரம் இந்தியருக்கு விருது
மோக்ஸ்ட்ரா என்பது, இணைய தளங்களிலும், கைபேசிகளிலும் செயற்படக்கூடிய வங்கிப் பரிவர்த்தனைக்கான செயலி (App). இச்செயலி சிட்டி வங்கி நடத்தும் கைபேசி செயலிகளுக்கான போட்டியில், 2015ஆம் ஆண்டுக்கான பரிசை வென்றதன் மூலம், தன் பயணத்தைத் தொடங்கியது. தற்போது மோக்ஸ்ட்ரா உலகமெங்கும் பரவியுள்ள 6 பெரிய வங்கிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பட்டியலில், சிட்டி வங்கியின் இந்தியப் பிரிவும் அடக்கம். சென்ற மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற நிதி நிறுவனங்களுக்கான விழாவில் (Singapore Fintech Festival -- 17) நடந்த புது முயற்சிகளுக்கான போட்டியில் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று செயலிகளில் மோக்ஸ்ட்ராவும் ஒன்று. வெற்றிபெற்ற மோக்ஸ்ட்ராவிற்கு பெரும் பங்களித்த இந்தியரான ராகவேந்திரா ரமேஷ் விருதைப் பெற்றுக்கொண்டார்.