உள்ளூர் செய்திகள்

அடுத்த வாரம்

வருகைஅண்டை நாடான இலங்கையின் பிரதமராகப் பதவியேற்ற பின், மகிந்த ராஜபட்சே முதல் முறையாக இந்தியாவுக்கு அடுத்த மாதத் தொடக்கத்தில் வரவுள்ளார். தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இலங்கை அதிபர் கோத்தபயா, தன் முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வந்திருந்தார். போட்டிதமிழ்நாடு சதுரங்க சங்கம் சார்பில், சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட மாஸ்டர் சதுரங்கப் போட்டி தொடங்கியுள்ளது. இதில் பல்வேறு சுற்றுகளாகப் போட்டிகள் நடக்கின்றன. இந்தப் போட்டி வரும் 25ஆம் தேதி நிறைவு பெறுகிறது. வெற்றி பெறுவோருக்கு, மொத்தம் 15 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது.பயிற்சிசென்னையில் வரும் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஏற்றுமதி இறக்குமதி சட்டத் திட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது. தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இதில், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு: www.editn.in.ஆய்வு வகுப்புதேசிய உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி.க்களில் படிக்காத, மற்ற இன்ஜினியரிங் மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு, ஆராய்ச்சி பயிற்சி வகுப்புகளை, சென்னை ஐ.ஐ.டி. நடத்த உள்ளது. மே 20 முதல் ஜூலை 19 வரை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். பிப். 29க்குள் விண்ணப்பிக்க:- sfp.iitm.ac.in/contactus


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !