உள்ளூர் செய்திகள்

நான்கில் ஒன்று சொல்

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.1.வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை, ரிசர்வ் வங்கி சமீபத்தில் எத்தனை சதவீதம் குறைத்துள்ளது?அ. 0.25ஆ. 0.50 இ. 1ஈ. 0.152. இந்தியாவில் எத்தனை சதவீத வாரிசுகள் மட்டுமே, குடும்பத் தொழிலைத் தொடர விரும்புவதாக, எச்.எஸ்.பி.சி. வங்கியின் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது?அ. 7 ஆ. 5இ. 20ஈ. 453. தமிழகத்தில், சுங்க வரித்துறை சார்ந்த குறைகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில், புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள இணையதளத்தின் பெயர் என்ன?அ. சுங்க வரிஆ. பயணம்இ. துணைவன்ஈ. புகார்கள்4. ஜெர்மனியில் நடந்த உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், பெண்களுக்கான 50 மீ. 'ரைபிள் 3 பொசிஷன்ஸ்' பிரிவு இறுதியில், இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் சம்ரா வென்ற பதக்கம்?அ. தங்கம்ஆ. வெள்ளிஇ. வெண்கலம் ஈ. பிளாட்டினம்5. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி. நடத்திய ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த எத்தனை பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்?அ. 524ஆ. 683இ. 825ஈ. 723 6. ஒருவரின் இருப்பிடத்தைத் துல்லியமாக அறியச் செய்வதற்கான, டிஜிபின் (digipin) எனும், 'டிஜிட்டல் போஸ்டல் இண்டெக்ஸ் நம்பர்' என்ற டிஜிட்டல் முகவரி குறியீடு, எந்தத் துறையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது?அ. வங்கிஆ. தபால்இ. ஆன்லைன் டெலிவரிஈ. காவல்7. 'பிபா' உலகக் கோப்பை கால்பந்து தொடரில், தொடர்ந்து 23வது முறையாக பங்கேற்க தகுதி பெற்று சாதனைப் படைத்துள்ள அணி எது?அ. அர்ஜென்டினாஆ. ஜெர்மனிஇ. பிரேசில்ஈ. பிரான்ஸ்8. அன்டார்டிகாவின் பனிப்பாறைகள், அதைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் வாழும், மிக உயரமான எந்த வகை பென்குயின்கள், பருவநிலை மாற்றத்தால் வேகமாக அழிந்து வருகின்றன?அ. ஜென்டூஆ. மேகரோனிஇ. சின்ஸ்டிராப்ஈ. எம்பரர்விடைகள்: 1. ஆ, 2. அ, 3. இ, 4. இ. 5. ஈ, 6. ஆ, 7. இ, 8. ஈ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !