உள்ளூர் செய்திகள்

நான்கில் ஒன்று சொல்

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.01. தமிழகத்தைச் சேர்ந்த, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு, உலகளாவிய சந்தை வாய்ப்பு கிடைக்க, தமிழகத்தின் முதல் வெளிநாட்டு ஸ்டார்ட் அப் மையம், எந்த நாட்டில் தொடங்கப்பட்டு உள்ளது?அ. அமெரிக்காஆ. துபாய்இ. சிங்கப்பூர்ஈ. ரஷ்யா02. வணிகம் செய்வதை எளிதாக்க வகை செய்யும் விதத்தில், நூற்றாண்டு பழமையான (1923) சட்டத் திட்டத்தை மாற்றி, எதற்கான புதிய மசோதா, ராஜ்யசபாவில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது?அ. விமானம்ஆ. கன்டெய்னர்இ. கொதிகலன்ஈ. பூச்சுக்கொல்லி03. இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள பள்ளிகளில், ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் மாணவர்கள், 'குட் மார்னிங்' சொல்வதற்குப் பதிலாக, 'ஜெய்ஹிந்த்' எனக் கூறும்படி, பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியது?அ. ஹரியாணாஆ. அசாம்இ. குஜராத்ஈ. பஞ்சாப்04. விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கெளன்சில் உருவாக்கியுள்ள, அதிக மகசூல் அளிக்கக்கூடிய எத்தனை வகை பயிர் விதைகளை, பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிமுகப்படுத்தினார்?அ. 100ஆ. 95இ. 115ஈ. 10905. மத்திய அரசில் மிகவும் முக்கிய, உயரிய பதவியாகக் கருதப்படும், கேபினட் செயலர் பதவி, தமிழகத்தைச் சேர்ந்த, மத்திய நிதித்துறை செயலரான யாருக்குச் சமீபத்தில் வழங்கப்பட்டது?அ. டி.வி.சோமநாதன்ஆ. டி.கே.சாமிநாதன்இ. எஸ்.பத்மநாபன்ஈ. எம்.லோகநாதன்06. இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள, 10 சட்டசபைத் தொகுதிகளுக்கு, விரைவில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது?அ. பீஹார்ஆ. மஹாராஷ்டிரம்இ. ஜார்க்கண்ட்ஈ. உத்தரப் பிரதேசம்07. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர், உடல்நலக் குறைவால் சமீபத்தில் காலமானார். அவர் யார்?அ. கருணாகரன்ஆ. நட்வர் சிங்இ. பிரணாப் முகர்ஜிஈ. டி.ஸ்ரீநிவாஸ்08. சமீபத்தில் நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் தொடரில், மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர் யார்?அ. வினேஷ் போகத்ஆ. ஆனந்த் அமிர்இ. அமன் ஷெராவத் ஈ. வினய் மாலிக்விடைகள்: 1.ஆ, 2. இ, 3. அ, 4. ஈ, 5. அ, 6. ஈ, 7. ஆ, 8. இ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !