உள்ளூர் செய்திகள்

விடாமுயற்சியே வெற்றி தரும்!

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் குறிக்கோள், லட்சியங்கள் இருக்கும். அப்படி இருந்தால்தான் நாம் தெளிவான சிந்தனையோடு வாழ்வில் முன்னேறுகிறோம் என்று அர்த்தம். குறிக்கோளை அடைய நாம் பலவிதமான வழிகளில் முயற்சி செய்கிறோம். நமக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று முயற்சியில் தோல்வியுறுகிற பலரும் சோர்ந்துவிடுகிறோம். ஆனால் விடாமுயற்சியோடு தங்கள் லட்சியங்களைத் தொடர்கிறவர்கள் வெற்றி பெறுகிறார்கள். நம் குறிக்கோள்களை அடைய விடாமுயற்சி தேவையா? அதிர்ஷ்டம் தேவையா? என்பது பற்றி சென்னை, பெரம்பூர், கலிகி அரங்கநாதன் மான்ஃபோர்ட் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடினார்கள். விடாமுயற்சி, அதிர்ஷ்டம் பற்றிய இன்றைய தலைமுறையினரின் கருத்து என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம்.சி.ஹரிணி 9ஆம் வகுப்புகுறிக்கோளை அடைய விடாமுயற்சிதான் முக்கியம். இது எல்லோருக்குமே தெரியும். ஆனா நிறையப் பேர் ஏன் அதிர்ஷ்டத்தை எதிர்பார்க்கிறோம்? முயற்சி செய்யத் தயங்கிறவங்கதான் அதிர்ஷ்டத்தை நம்புவாங்க. அன்னன்னைக்கு செய்ய வேண்டிய வேலையை அன்னைக்கே செஞ்சு முடிக்கணும். நாளைக்குப் பாத்துக்கலாம்னு காலம் கடத்தக்கூடாது. ஒரு லட்சியத்தை அடையணும்னு முடிவெடுத்துட்டா விடாமுயற்சியோட அதை எப்படியாவது நிறைவேத்தணும். விடாமுயற்சியே வெற்றி தரும்.சு.பிரீத்தி சுப்ரியா 9ஆம் வகுப்புஎனக்கு அதிர்ஷ்டம் மேல நம்பிக்கையில்ல. அதிர்ஷ்டம்ங்கறதை வேணும்னா வாய்ப்புன்னு எடுத்துக்கலாம். குறிக்கோளை அடைய தீவிரமா முயற்சி பண்றவங்க கூட வாய்ப்புக் கிடைக்காத காரணத்தால அதை சில நேரங்களில அடைய முடியாம போயிடுது. குறிக்கோளுக்கு எப்படி விடாமுயற்சி அவசியமோ அதே போல வாய்ப்பும் அவசியம்தான். சரியான நேரத்தில கிடைக்கிற வாய்ப்பு குறுகிய முயற்சியிலேயே வெற்றியைத் தேடித் தந்துடுது.கு.சுவேதா 9ஆம் வகுப்புவிடாமுயற்சி, அதிர்ஷ்டம் ரெண்டையுமே நான் நம்பறேன். எல்லா விஷயத்திலேயும் முயற்சி பண்ணிட்டேதான் இருக்கோம். ஆனா அதிர்ஷ்டம் இருந்தா நமக்கு சீக்கிரமே வெற்றி கிடைச்சிடுது. சிலருக்கு ரொம்ப நாளா முயற்சி பண்ணியும் தங்களோட குறிக்கோளை அடைய முடியாம இருக்கு. பல குறிக்கோள்களை வெச்சிகிட்டு எல்லாத்தையும் அடையணும்னு சிலர் நினைக்கறாங்க. நம்ம குறிக்கோள் என்ன, அதுல எது மிக முக்கியமானதுன்னு தெளிவா சிந்திச்சு அதை நோக்கியே நம்ம சிந்தனைகளை வெச்சுட்டு முயற்சி செஞ்சா எல்லாத்துலயும் வெற்றிதான்.ஜே.ரோகித் 9ஆம் வகுப்புஅதிர்ஷ்டத்தை நம்பினா எந்தக் குறிக்கோளையும் அடைய முடியாது. விடாமுயற்சிதான் பலனைத் தரும். அதேசமயம் ஓவர் கான்ஃபிடன்ஸ் இருந்தாலும் அது ஆபத்துதான். நம்பிக்கை அதிகமா வேணும். நாம எந்தக் குறிக்கோளை நோக்கி முயற்சிக்கிறோமோ அதை நம்பணும். அதுக்கு அடுத்தபடியா அதை அடைய தீவிரமா முயற்சி செய்யணும். அதிர்ஷ்டத்தை நம்பி குறிக்கோளை அடைய நினைச்சா அது மண் குதிரையை நம்பி ஆத்துல இறங்கற மாதிரி.ரா.சூரிய பிரகாஷ் 9ஆம் வகுப்புவிடாமுயற்சி, அதிர்ஷ்டம் ரெண்டுமே தேவைதான். ஓட்டப்பந்தயத்துல நம்மைவிட நல்லா ஓடறவன் வந்தாலும் அன்னைக்கு அவன் சரியா ஓடலன்னா அடுத்த வெற்றி வாய்ப்பு நமக்குத்தானே. விடாமுயற்சியோட கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருந்தா நல்லதுதான். ஆனா வெறும் அதிர்ஷ்டத்தையே நம்பிக்கிட்டு நாம ஒரு முயற்சியும் செய்யலன்னா நமக்கு வெற்றி கிடைக்காது. முயற்சி திருவினையாக்கும் என்பதே சரி.மூ.சந்தோஷ் 9ஆம் வகுப்புகுறிக்கோளை அடையணும்னா விடாமுயற்சி தேவை. இதை யாருமே மறுக்க மாட்டாங்க. எந்தச் செயலைச் செய்தாலும் தொடர்ந்து முயற்சி பண்ணிட்டே இருக்கணும். சித்திரமும் கைப்பழக்கம்ன்னு சொல்வாங்க இல்லையா? அதுபோலத்தான். விடாமுயற்சியோட எதைச் செஞ்சாலும் அதுக்குப் பலனா நிச்சயம் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டம் என்பது நம்ம தோல்வியை சமாதானப்படுத்திக்கறதுக்கான வார்த்தை. விடாமுயற்சி இருந்தா அங்க அதிர்ஷ்டத்துக்கு வேலையே இல்ல.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !