உள்ளூர் செய்திகள்

பெருஞ்சித்திரனார்

பெருஞ்சித்திரனார் நினைவு தினம் ஜூன் 11சிறுவர்களுக்கு மகிழ்ச்சி தருபவை பாடல்கள். அதிலேயே அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களைப் பொதிந்து வைப்பது ஒரு வகை. இந்தப் பாட்டைப் பாருங்கள்... எப்பொழுதும் பாதையில் இடது பக்கம் நடந்து போதப்பில் லாமல் நடப்பதால்தடைகள் வாய்ப்ப தில்லையேநடந்து போகும் மேடையில்நடந்து செல்லல் நல்லதுகடந்து போக, இரு புறம்கவனி; பின் விரைந்து போபடித்துக்கொண்டு நடப்பதும்பந்து தட்டிப் போவதும்இடித்துக் கொண்டு செல்வதும்என்றும் தீங்கு செய்யுமே!இதை எழுதியவர் பெருஞ்சித்திரனார். தமிழ் மீதும், தமிழ் இனத்தின் மீதும் தீராத பற்றுடையவர். இயற்பெயர் இராசமாணிக்கம். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.குழந்தை, மலர்க்காடு என்னும் கையெழுத்து இதழ்களைப் படிக்கும் காலத்திலேயே நடத்தியவர். தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ் நிலம் என்னும் பெயர்களில் அச்சுப் பத்திரிகைகள் நடத்தியவர். அஞ்சல் துறையில் பணியாற்றிவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !