உள்ளூர் செய்திகள்

நெல்லிலும் உண்டு ஒட்டுரகம்

பழம், காய்கறி வகைகளைப் போலவே, நெல்லிலும் ஒட்டுரகம் உண்டு. இருவேறு மரபணுப் பின்னணி கொண்ட நெல் வகைகளை இணைத்து, அதிக விளைச்சல் தரும் நெல் ரகங்கள் உருவாக்கப்படுகின்றன. இவைதான் ஒட்டுரக நெல் (Hybrid rice) ஆகும். இவ்வகை நெல், அளவில் பெரியது. இப்படி உருவாக்கப்படும் முதல் தலைமுறை நெல் விதைகள் மட்டுமே வீரியத்துடன் காணப்படும். அடுத்தடுத்த தலைமுறையில் விளைச்சல் பெருமளவு சரியும். இதனால் விவசாயிகள் விதைக்காக விவசாய நிறுவனங்களைச் சார்ந்திருக்க நேர்கிறது. முதல் தலைமுறை நெல்லிலும்கூட அதிக விளைச்சல் பெறுவதற்கு ஊட்டச்சத்துகள், பூச்சி மருந்துகள் அதிகம் பயன்படுத்த வேண்டியது இருக்கிறது. இவைதவிர, இவ்வகை நெற்பயிர்கள் அதிகமான நோய்த் தாக்கத்திற்கு உள்ளாவதாக, சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. - கௌரி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !