உள்ளூர் செய்திகள்

தேதி சொல்லும் சேதி!

ஜனவரி 3, 1760 - கட்டபொம்மன் பிறந்த நாள்ஆங்கிலேயரிடம், 'வரிசெலுத்தும் அவசியம் எங்களுக்கு இல்லை' என்று துணிச்சலாகக் கூறியவர். இவரது வீரத்தைப் பார்த்து, சுற்றியுள்ள அனைத்து மன்னர்களும் ஆங்கிலேயரை எதிர்த்தனர். இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியவர். ஜனவரி 3, 1969 - மைக்கேல் சூமாக்கர் பிறந்த நாள்ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த தலைசிறந்த ஃபார்முலா I கார் பந்தய வீரர். ஏழு முறை (1994, 1995, 2000, 2001, 2002, 2003, 2004) உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். தொடர் வெற்றிகளால், கார் பந்தயத்தின் மிகச் சிறந்த ஓட்டுநர் என்ற பெருமை பெற்றிருக்கிறார்.ஜனவரி 4, 1643 - ஐசக் நியூட்டன் பிறந்த நாள்புவி ஈர்ப்பு விசையை கண்டறிந்த அறிவியலாளர். அறிவியல், கணிதம், இயந்திரவியல் ஆகிய துறைகளில் ஆய்வுகள் செய்தார். ஒளியியலிலும் மகத்தான புரட்சியை ஏற்படுத்தினார். இவருடைய இயந்திரவியல் விதிகள்,பொறியியல் சிக்கல்களுக்குத் தீர்வு காணப் பயன்படுகின்றன.ஜனவரி 4, 1809 - லூயி பிரெய்லி பிறந்த நாள்பார்வையற்றவர்கள் படிக்கும் பிரெய்லி எழுத்துகளை உருவாக்கியவர். இதற்காக உலக நாடுகள் பலவும் இவரது அஞ்சல் தலை, நினைவு நாணயங்கள் வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளன. இவருடைய பிறந்த நாள் 'உலக பிரெய்லி தினமாக' கொண்டாடப்படுகிறது.ஜனவரி 5, 1592 - ஷாஜகான் பிறந்த நாள்பாபர், அக்பர் ஆகியோருக்குப் பின் முகலாய சாம்ராஜ்யத்தின் மன்னராக இருந்தார். இவரது ஆட்சிக்காலம் முகலாயர்களின் பொற்காலம் எனச் சொல்லப்படுகிறது. பலநினைவுச் சின்னங்களை எழுப்பினார். அவற்றில் ஒன்றுதான் ஆக்ராவில் உள்ள தாஜ் மஹால்.ஜனவரி 6, 1883 - கலீல் ஜிப்ரான் பிறந்த நாள்உலகின் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர். எழுத்தாளர், ஓவியர், தத்துவவாதி, கவிஞர் என பன்முகத் திறன் கொண்டவர். இவரது படைப்புகள் ஒவ்வொரு தனிமனித எண்ணங்களையும் பிரதிபலித்தன. உலகின் பல இடங்களில் இவரது ஓவியக் கண்காட்சிகள் நடைபெற்றுள்ளன.ஜனவரி 6, 1959 - கபில் தேவ் பிறந்த நாள்புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர். 1983ல் இந்தியா உலகக்கோப்பையை வென்ற போது அணியின் தலைவராக இருந்தார். 'ஹரியானா புயல்' என்ற பட்டப்பெயரை அவர் பெற்றிருந்தார். இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை லண்டன் அரசு கொடுத்தது.ஜனவரி 8, 1942 - ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்த நாள்பிரபல இயற்பியல் விஞ்ஞானியும், கணித நிபுணரும் ஆவார். பெருவெடிப்புக் (Big Bang) கொள்கைக்கான கணிதப்பூர்வ நிரூபணத்தை அளித்ததன் மூலம், இயற்பியல் உலகில் புகழ் பெற்றார். இளவயதிலேயே நரம்பியக்க நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், கணினி பேச்சுத் தொகுப்பி மூலம் தன் கருத்துகளைக் கூறி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !