உள்ளூர் செய்திகள்

தேதி சொல்லும் சேதி

டிசம்பர் 18, 1878 - ஜோசப் ஸ்டாலின் பிறந்த நாள்சோவியத் யூனியனின் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர். 20ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான, செல்வாக்குமிக்க நபர். தொழில்துறையிலும் ராணுவத்திலும் நாட்டை வல்லரசாக மாற்றியவர். இவருடைய பொருளாதாரத் திட்டங்களால் ரஷ்யாவில் தொழிற்புரட்சி ஏற்பட்டது.டிசம்பர் 18, 1856 - ஜெ. ஜெ. தாம்சன் பிறந்த நாள்நவீன அணு இயற்பியலின் தந்தை! மின்சாரவியல், காந்தவியலில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். ஒளியின் அமைப்பு, பொருளின் துகள் கொள்கை, நேர் மின்சார கதிர்கள் என, இயற்பியலை விளக்கும் புத்தகங்களை வெளியிட்டுள்ளார். 1906இல் இவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.டிசம்பர் 18, 2000 - சர்வதேச புலம் பெயர்ந்தோர் நாள்வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கு, சட்டப்படியான உரிமைகள் கிடைப்பதில்லை. அங்கே பல்வேறு அடக்கு முறைகளுக்கு ஆளாகிறார்கள். ஒவ்வொரு நாடும், தங்கள் நாட்டில் குடியேறுபவர்களைத் தனது சொத்தாக மதித்து நடத்த வேண்டும் என்பதற்காக, ஐ.நா.சபையால் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.டிசம்பர் 20, 2002 - ஐ.நா. சர்வதேச ஒருமைப்பாடு நாள்வளரும் நாடுகளில் வறுமையை ஒழிக்கவும், மனித சமூக மேம்பாட்டிற்கு உதவவும், ஐ.நா. சபை உலக ஒருமைப்பாடு திட்டத்தின் கீழ் ஒரு நிதியை நிறுவியது. அதன்மூலம் அமைதி, செழிப்பு, வளரும் தலைமுறையினரிடம் நிலையான முன்னேற்றம் ஏற்பட இந்த நாள் கொண்டாடப்படுகிறது.டிசம்பர் 22, 1666 - குரு கோவிந்த் சிங் பிறந்த நாள்சீக்கிய மதத்தவரின் பத்தாவது குரு. அரபி, பெர்சியன், சமஸ்கிருதம் போன்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்திருந்தார். பிற்கால சீக்கிய மதக் கோட்பாடுகளுக்கு வித்திட்டார். 'குரு கிரந்த் சாஹிப்' என்கிற சீக்கிய மத நூலை புனித நூலாக்கி இருக்கிறார்.டிசம்பர் 24, 1986 - தேசிய நுகர்வோர் உரிமைகள் நாள்விற்பனையாளர்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை உறுதி செய்யவும், நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்கவும் சட்டம் உருவாக்கப்பட்டது. நுகர்வோர் விழிப்புணர்வை வலியுறுத்தி, இந்தியாவில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !