தேதி சொல்லும் சேதி
மார்ச் 26, 1973 - லாரி பேஜ் பிறந்த நாள்உலகம் முழுக்க வெற்றிநடை போடும் கூகுள் தேடுபொறியை உருவாக்கிய இருவரில் ஒருவர். 2014ஆம் ஆண்டின் சிறந்த தொழிலதிபராக ஃபார்ச்சூன் இதழால் தேர்வு செய்யப்பட்டார்.மார்ச் 27, 1845 - வில்ஹெம் ரான்ட்ஜன் பிறந்த நாள்உள் உறுப்புகளைப் பார்வையிடும் எக்ஸ் கதிர்களைக் கண்டறிந்து, இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றார். இவரது பெயரால் தனிம அட்டவணையின் 111வது தனிமமாக ரான்ட்ஜெனியம் இருக்கிறது.மார்ச் 27, 1961 - உலக நாடக நாள்பல்வேறு தேசிய, சர்வதேச நாடக நிகழ்வுகளை சர்வதேச நாடக நிறுவனம் (International Theatre Institute) நடத்தி வருகிறது. யுனெஸ்கோ மற்றும் அதன் கலாசாரத் துறையின் சார்பாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. மார்ச் 28, 1926 - பாலி உம்ரிக்கர் பிறந்த நாள்இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர். 1955 முதல் 1958 வரை டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்தார். இவர் பெயரில் இந்தியாவின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான விருது வழங்கப்படுகிறது.மார்ச் 30, 1709 - ஆனந்தரங்கம் பிள்ளை பிறந்த நாள்பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனியின் மொழிபெயர்ப்பாளர். 18ஆம் நூற்றாண்டின் பல நிகழ்வுகளை வரலாற்றுப் பதிவாக ஏறக்குறைய 25 ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதி இருக்கிறார்.மார்ச் 31, 1934 - கமலா தாஸ் பிறந்த நாள்'மாதவிக்குட்டி' எனும் பெயரில் எழுதிய புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர். ஆங்கிலக் கவிதைக்காகப் பல உயரிய விருதுகள் பெற்றுள்ளார். 'என் கதை' (My story) எனும் தலைப்பில் சுயசரிதையை 1976இல் வெளியிட்டார்.