உள்ளூர் செய்திகள்

பரவும் விழிப்புணர்வு!

சமீபத்தில் ஒரு புகார் வந்தது, பெற்றோர் இருவரும் அரசு உயர் பதவியில் இருப்பவர்கள். அவர்களது மூத்த பெண் 11ஆம் வகுப்பு படிப்பவர். அவளுக்கு ஒரு போன் வாங்கிக் கொடுத்துள்ளனர். சிறிது நாட்களில், அம்மாணவிக்கு எப்படியோ ஒருத்தன் அறிமுகமாகிறான். ஒரு கட்டத்தில் அவன், அம்மாணவியின் ஆடையில்லா புகைப்படத்தைக் கேட்க, அவள் சிறிது தயக்கத்துடன் அதைப் பகிர்ந்துகொள்கிறாள். அந்தப் படத்தைப் பெற்றவன், அதை நண்பர்கள் பலருக்கும் அனுப்புகிறான். இது அவளுக்குத் தெரியவர, அவள் வீட்டில் தெரிவிக்க, பிரச்னை அங்கிருந்து எங்களிடம் வந்தது.காவல்துறை, சம்பந்தப்பட்ட அவனை போஸ்கோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இணையத்தின் இளம் வயதுடையவர்களைக் குறிவைத்து நிறைய குற்றவாளிகள் உலா வருகின்றனர். இளம் வயதினர் அடையும் துன்பங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று,- இவர்களை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்வது, இரண்டாவது வகையினர், தாங்களே இப்படியான வலைகளுக்குள் சிக்கிக்கொள்வது. இதுபோன்ற பல சம்பவங்கள் உண்டு. இதற்காகவே, 'இணைய அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி' என்று இளையோருக்கான பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை யுனிசெஃப் நடத்துகிறது. இன்னொரு சம்பவம் இன்னும் முக்கியமானது. இந்திய இளையோரில் 80 சதவீதத்தினர் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனர். இதனை அறிந்த யுனிசெஃப், அதுபற்றிய பிரசாரத்தைச் செய்தது. பீகார் மாநிலத்தில் கஸ்பா எனும் கிராமத்தில் 14 வயது அமிதாவுக்கு, காவல்துறையில் சேர்ந்து பணியாற்றவேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. தன் ஊட்டச்சத்து குறைபாட்டை அறிந்தவர், யுனிசெஃப்பை நாடினார். அமைப்பின் உதவியால், தன் வீட்டருகே, சொந்தமாக ஒரு கீரை, காய்கறிகளை பயிரிட்டார். அதில் கிடைத்த காய்கறிகளைத் தொடர்ந்து உட்கொண்டார். அடுத்த சில மாதங்களிலேயே அவரது ஊட்டச்சத்தில் முன்னேற்றம் தெரிந்தது. அமிதாவை முன்வைத்து, சுமார் 100 பள்ளிகளில் காய்கறித்தோட்டங்கள் அமைத்துள்ளது யுனிசெஃப். 2019இல் நடைபெற்ற இளையோருக்கான முயற்சிகளில், இந்த இரண்டையும் முக்கியமானதாக நான் கருதுகிறேன். அ. தேவநேயன், குழந்தைகள் உரிமைச் செயற்பாட்டாளர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !