கோடைக்கால கணிதப் பயிற்சி முகாம்!
சென்னை கணித அறிவியல் நிறுவனம் (Institute of Mathematical Sciences - IMSc) சார்பில், மாணவர்களுக்கான கோடைக்கால கணிதப் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம், சென்னை, தரமணியில் வரும் மே 8ஆம் தேதி தொடங்குகிறது. பத்து நாட்களுக்கு நடைபெறவுள்ள இம்முகாமில், செயல்முறை பயிற்சி அளிக்கப்படும். மேலும், ஆய்வுகள் தொடர்பான ஆசிரியர்களின் விரிவுரை வழங்கப்படும். 9ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை செல்லவுள்ள மாணவர்கள் இம்முகாமில் பங்குபெறலாம். கட்டணம் கிடையாது. மாணவர்கள், https://www.imsc.res.in/outreach/SSSW2018/ என்ற முகவரியில், மே1ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.