உள்ளூர் செய்திகள்

இனியவை நாற்பது

சங்க இலக்கியங்கள் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பதினெண் மேல்கணக்கு, பதினென் கீழ்கணக்கு என்ற வகைப்பாடு அவற்றில் ஒன்று. எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் மேல்கணக்கு நூல்கள். பத்து நூல்களின் தொகுப்பு, பத்துப்பாட்டு. எட்டு நூல்களின் தொகுப்பு, எட்டுத்தொகை.கீழ்கணக்கிலும் பதினெட்டு நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த கீழ்கணக்கு நூல்களில் ஒன்றுதான் இனியவை நாற்பது. மனிதனின் ஒழுக்க முறைகள் பற்றி கூறுவதால், இனியவை நாற்பது அற இலக்கியம். நாற்பது பாடல்களைக் கொண்டதால், இனியவை நாற்பது. ஒவ்வொரு பாடலிலும் இனிதே, இனிது என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருப்பது இந்த நூலின் சிறப்பு.இந்நூலின் ஆசிரியர் பூதஞ்சேந்தனார். நூலில் உள்ள, கடவுள் வாழ்த்துப் பாடலை், கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. நீரின் முக்கியத்துவத்தையும், மரம் வளர்ப்பதன் அவசியத்தையும் இன்று பேசுகிறோம். ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன், எழுந்த இனியவை நாற்பது நூலில் 'காவோடு அறக்குளம் தொட்டல் மிக இனிதே' என்று சோலையும், குளமும் அமைத்தல் மிகப்பெரும் அறச்செயல் என குறிப்பிடப்படுகிறது.'பிச்சை புக்குஆயினும் கற்றல் மிகஇனிதே;நல்சவையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்இனிதே;முத்து ஏர் முறுவலார் சொல் இனிது; ஆங்கு இனிதே,தெற்றவும் மேலாயார்ச் சேர்வு' 'பிச்சை எடுத்தாவது படித்தல் இனிது. நல்ல சபையில் கற்றோரை வாழ்த்துவது இனிது. முத்தைப்போன்ற பற்களையுடைய மகளிரது சொல் இனிது. அறிவில் சிறந்த பெயரியவர்களை துணையாகக் கொள்வதும் இனிதே' என்பது இந்தப் பாடலின் பொருளாகும்.- மணி. மாறன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !