மிகச்சிறிய செர்ரிப் பழங்கள்
டிராப் டமோட்டா (Drop Tomato) என்று பெயரிடப்பட்டுள்ள உலகின் மிகச் சிறிய செர்ரிப் பழத்தை இஸ்ரேல் உருவாக்கியுள்ளது. பாலைவனப் பகுதியான இஸ்ரேலில் கிடைக்கும் குறைந்த அளவு நீர்ப்பாசன வசதியைக் கொண்டு, தொழில்நுட்ப உதவியுடன் விவசாயத்தில் புதுமைகளைப் புகுத்தி வருகின்றனர். அந்த வகையில் மிகச் சிறிய செர்ரிப் பழ வகையை இப்போது அந்நாட்டின் கெட்மா (Kedma) நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.சிவப்பு மற்றும் மஞ்சள் என இருவகையில் இந்த செர்ரிப் பழங்கள் சோதனை முறையில் பயிரிடப்பட்டுள்ளன. ஹாலந்து நாட்டிலிருந்து பெறப்பட்ட விதைகளை இஸ்ரேலிய சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துள்ளனர். செர்ரிப் பழங்கள், சாலட் போன்ற சமையல் வகைகளுக்கு ஏற்றவையாக இருக்கும்.