உள்ளூர் செய்திகள்

கபிலர் பாடிய பூக்கள் எவை?

பத்துப்பாட்டு எனும் சங்க நூல் தொகுப்பில் அடங்கியது குறிஞ்சிப் பாட்டு. கபிலர் என்னும் புலவர் பாடியது. இந்தப் பாட்டில் 99 பூக்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார் கபிலர். அவர் திட்டமிட்டு 99 பூக்களைப் பற்றி பாடவில்லை. ஆரிய அரசன் பிரகத்தன் என்பவரை கபிலர் (எங்கோ) சந்திக்கிறார். அந்த அரசனுக்கு தமிழின் பெருமை, தமிழர் காதலை உணர்த்தும் வகையில் இந்தப் பாடலைப் பாடுகிறார். 'அன்னாய் வாழி வேண்டன்ன' என தொடங்கும் அந்தப் பாடல், 261 அடிகளைக் கொண்டது. பாடலின் இடையில்தான் 99 பூக்களின் பெயர்கள் வருகின்றன. இவை மட்டும் அல்ல, பிறவும் என்று அந்தப் பாடலில் குறிப்பிடுவதால், நூற்றுக்கும் மேற்பட்ட பூக்கள் குறிஞ்சி நிலத்தில் பூத்திருந்தன என்பதை நாம் அறியவேண்டும். நீர், நிலம், மலையடிவாரம், மரக்கிளை என்று எங்கும் காணும் பூக்களை தலைவி, தோழியருடன் சேர்ந்து சேகரிக்கிறாள். அங்கு தலைவன் வருகிறான். அப்போது யானை வருகிறது. தலைவி பயம் கொள்கிறாள், அவன் காப்பாற்றுகிறான் என்று பாடலின் கதை நீள்கிறது. கபிலர் குறிப்பிட்டுள்ள பூக்கள், பெரும்பாலும் நாம் அறிந்தவையே. ஆனால், வேறு பெயர்களில் அழைத்துக் கொண்டிருக்கிறோம். அவற்றில் ஒரு சில பூக்களின் பெயர்கள் மட்டும் இங்கே!மணிச்சிகை - குன்றிமணிஉந்தூழ் - பெரு மூங்கில் கூவிளம் - வில்வ மரம்சுள்ளி - முள் கனகாம்பரம்கூவிரம் - வில்வ மரம்வடவனம் - துளசிஎருவை - கோரைப் புல்செருவிளை - வெள்ளைக்காக்கணாம் பூவானி - ஓமம்வகுளம் - மகிழம் பூ ஆவிரை - ஆவாரம் பூவேரல் - மலை மூங்கில்கோங்கம் - நெல்லி மரம்அதிரல் - காட்டு மல்லிவள்ளி - பூசணிகொகுடி - கொடி முல்லைசெம்மல் - முல்லைகோடல் - வெண்காந்தள்கைதை - தாழம்பூ மரா அம் - கடம்ப மரம் தணக்கம் - நுணா மரம்ஆத்தி - திருவாத்தி மரம்பகன்றை - கிலுகிலுப்பைச்செடிபலாசம் - முருக்க மரம், பிண்டி - அசோக மரம்பித்திகம் - சாதிமல்லி சிந்துவாரம் - நொச்சிதுழாய் - கிருஷ்ணதுளசிபுன்னாகம் - புங்கைபாரம் - பருத்திபீரம் - பீர்க்கம் பூ ஆரம் - சந்தனம்காழ்வை - அகில் நரந்தம் - நாரத்தம் நாகம் - நாவல்குருந்(து)தம் - காட்டு எலுமிச்சைபுழகு - மலை எருக்கு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !