உள்ளூர் செய்திகள்

மகளிர் மட்டும் ஆட்டோக்கள்

குஜராத், சூரத் நகரில் பெண்களின் பாதுகாப்பான பயணத்திற்கு, 'பிங் ஆட்டோ' என்ற சேவை தொடங்கப்பட்டுள்ளது. பெண்களால் ஓட்டப்படும் இந்த வாகனங்கள், பெண் வாடிக்கையாளர்களுக்காகவே இயங்குகின்றன. எனவே, நேரம், போக வேண்டிய இடத்தின் தன்மை போன்ற கவலைகள் இன்றி, பெண்கள் இந்த வாகனங்களில் பயணம் செய்ய முடியும். பெண் ஓட்டுனர்களுக்கு ஆட்டோ வாங்க, பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் மூலம் கடன் வசதி ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது.“பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் அதே நேரத்தில், பெண் பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் விதமாக இந்தத் திட்டத்தை வடிவமைத்துள்ளோம். இப்போது 15 பெண் ஓட்டுனர்களோடு தொடங்கப்பட்டுள்ள இந்தச் சேவை, விரைவில் மேலும் விரிவுபடுத்தப்படும். அதற்காக மேலும் 70 பெண்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம்” என்று சூரத் மாநகராட்சி கமிஷனர் காயத்ரி ஜரிவாலா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !