சென்னை புகைப்பட பினாலே அறக்கட்டளையின் அகில இந்திய அளவிலான சிபிபி புகைப்பட போட்டியின் நான்காம் பதிப்பில் பங்கேற்றவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சென்னை லீலா பேலஸில் நடைபெற்றது.
அன்றாட வாழ்க்கை மற்றும் கலாச்சாரம்,உருவப்படங்கள்.இயற்கை மற்றும் வனவிலங்கு,காலநிலை, சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு,செய்தி மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.
ஒவ்வொரு போட்டிக்கும் பல ஆயிரக்கணக்கான போட்டியாளர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இறுதியில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த விஷால் பட்நாகர்,கொச்சியைச் சார்ந்த துளசி காக்கட்,டில்லியைச் சேர்ந்த சுரேந்தர் சோலங்கி,கொச்சியைச் சேர்ந்த ஜோசப் ராகுல்,சென்னையைச் சேர்ந்த அகிலன் தியாகராஜன்,புனேயைச் சேர்ந்த நித்தின் ஜெயின்,நொய்டாவைச் சேர்ந்த அனின்டோ முகர்ஜி,காஜியாபாத்தைச் சேர்ந்த சிங்கி சுக்லா,மணிப்பூரைச் சேர்ந்த ஸ்டீபன் லுவாங்,ஹைதரபாத்தைச் சேர்ந்த ஹர்ஷா வத்லாமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பரிசாக பணம்,பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்வின் நெறியாளராக பிரியா பாணிக் செயல்பட்டார்.