உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / மெட்ராஸ் போட்டோகிராபி சொசைட்டியின் புகைப்பட போட்டி

மெட்ராஸ் போட்டோகிராபி சொசைட்டியின் புகைப்பட போட்டி

மெட்ராஸ் போட்டோகிராபி சொசைட்டி சார்பில் அகில இந்திய அளவிலான புகைப்படப் போட்டி நடத்தப்படுகிறது.சென்னையில் உள்ள பழமையான இந்த போட்டோகிராபி சொசைட்டி புகைப்பட வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மாதம் ஒரு முறை கூட்டம் நடத்தி உறுப்பினர்களின் போட்டோக்களை திரையிட்டு அவர்களது திறமையை வளர்ப்பது,வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வது,திறமையாளர்களை அழைத்து பேசவைப்பது என்பது அவைகளில் சில.இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு புகைப்பட போட்டியினை நடத்துகிறது.இதில் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.வண்ணம்,கறுப்பு வெள்ளை,இயற்கை,போட்டோ ஜர்னலிசம்,உலகில் கவனம் என்ற ஐந்து தலைப்புகளில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.ஒருவர் ஒரு போட்டியிலோ அல்லது ஐந்து போட்டிகளிலுமோ கூடக் கலந்து கொள்ளலாம்.படங்களை 15/6/2024 ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.வெற்றி பெறுபவர்களுக்கு எம்பிஎஸ் தங்க,வெள்ளி,வெண்கல பதக்கங்களும்,சான்றிதழ்களும் வழங்கப்படும்.போட்டிக்கான நடுவர்களாக அகர்வால்,கிருஷ்ணாபட்,சந்தோஷ் குமார் ஜனா,பாலு,பாலசுப்பிரமணியம் உள்ளனர்.படங்களை எப்படி அனுப்புவது,எந்த அளவில் அனுப்புவது என்பது உள்பட அனைத்தும் தகவல்களையும் mpsphoto.inஎன்ற லிங்கில் கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். 7530093570(சதிஷ்)என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் விவரங்கள் அறியலாம்.மேற்கண்ட தகவலை புகைப்பட போட்டியின் சேர்மன் டாக்டர் அழகானந்தம் தெரிவித்துள்ளார்.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை