உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / ஆடிப்பெருக்கு கல்லுாரியில் மாணவியர் கோலாகலம்

ஆடிப்பெருக்கு கல்லுாரியில் மாணவியர் கோலாகலம்

ஆடி பதினெட்டாம் பெருக்கு நன்னாளான நாளை( ஆக.,03) தண்ணீர் சேமித்தல் எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு,சென்னையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லுாரி மாணவியர் தமிழர் பராம்பரிய முறைப்படி பல்வேறு இசை,நடன நிகழ்வுகளை நடத்தினர்.கல்லுாரியில் படிக்கும் காது கேட்காத வாய் பேச இயலாத மாணவியர் எதிர்காலத்தில் தண்ணீரின் தேவை எப்படி இருக்கப் போகிறது என்பதை மவுன நாடகமாக நடத்தியது பலரது பாராட்டையும் பெற்றது.நதிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பல மாணவியர் தாணியங்களாலான முளைப்பாரி சுமந்து வந்து கல்லுாரியினுள் உள்ள நீர் நிலையில் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.தொடர்ந்து கரகாட்டம்,தப்பாட்டம்,ஒயிலாட்டம் உள்ளீட்ட பல்வேறு நடனங்களை நிகழ்த்தி அசத்தினர்.நிகழ்ச்சி குறித்து பேசிய கல்லுாரி தலைவர் குமார் ராஜேந்திரன் கூறுகையில் மாணவியர் நமது கலாச்சாரத்தை பேணிப்பாதுகாக்கும் வகையில் இந்த ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் நடைபெறுகிறது,இதில் மாணவியர் உற்சாகமாக பங்கேற்றது நம்பிக்கை தருகிறது என்றார். -எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

RK
ஆக 03, 2024 00:52

அணைத்து சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள்... இது போல் பல் வேரு நல்ல விஷயங்களை மக்களுக்கு கொண்டு போய் சேர உங்களை போன்ற மாணவராகளால் மட்டும் முடியும்.. வாழ்த்துக்கள் நன்றி ....


முக்கிய வீடியோ