எண்ணம்
UPDATED : ஆக 28, 2025 | ADDED : ஆக 28, 2025
சுட்டெரிக்கும் வெயிலிலும் வேப்ப மரத்தடியில் துாங்கினான் ஒருவன். அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைக் கண்டான். 'கடின உழைப்பாளி போலிருக்கு. உழைத்த களைப்பால் துாங்குகிறான்' என நினைத்தான். சற்று நேரத்தில் அங்கு வந்த திருடன் ஒருவன், 'இரவில் கண் விழித்து திருடி இருப்பான் போல தெரிகிறது. அதனால் தான் அடித்துப் போட்டது போல் துாங்குகிறான்' என நினைத்தான். மூன்றாவதாக ஒரு குடிகாரன் வந்தான். 'காலையிலேயே என்னைப் போல குடித்து விட்டான் போல. இப்படி கவிழ்ந்து கிடக்கானே'' என சிரித்தபடி நடந்தான். ஒருவரின் எண்ணமே மற்றவர்களின் மீதும் பிரதிபலிக்கிறது.