கூடா நட்பு
UPDATED : நவ 27, 2025 | ADDED : நவ 27, 2025
விவசாயி ஒருவர் ஆசையாக புறா ஒன்றை வளர்த்தார். ஒருமுறை கூட விவசாயி சேமித்து வைத்திருந்த தானியத்தை சாப்பிட்டதே இல்லை. ஒருநாள் இரை தேடி அங்கு வந்த காக்கை கூட்டத்துடன் நட்பு கொண்டது. அதன்பின் விவசாயி வைத்திருந்த தானியத்தை காக்கைகளுடன் சேர்ந்து சாப்பிட்டது. தினமும் உணவு கிடைத்தாலும் காக்கையுடன் திருடி உண்பதையே புறா விரும்பியது. தானியக் குவியல் குறைவதை கண்ட விவசாயி, பறவைகளை பிடிப்பதற்காக வலையை விரித்தார். அதில் காக்கைகளுடன் தான் வளர்த்த புறாவும் சிக்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் விவசாயி. புறாவும் பயத்துடன் அங்கே நின்றது. இதைப் போலவே கெட்டவர்களுடன் நட்பு கொள்பவர் துன்பத்தில் சிக்கும் போது அதற்காக வருந்துவர்.