உள்ளூர் செய்திகள்

மனதை பொறுத்தே...

அமெரிக்காவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையே நடந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அதில் இறந்த போன தன் சகோதரனை முதுகில் சுமந்தபடி அடக்கம் செய்ய நினைத்தான் சிறுவன் ஒருவன். அதை பார்த்த வீரர் ஒருவர், 'தம்பி... உனக்கான முறை வருவதற்கு இன்னும் நீண்ட நேரமாகும். அதுவரை கனமாக இருக்கும் இந்த உடலை கீழே இறக்கலாமே' என்றார். அதற்கு அந்தச் சிறுவன், 'இவன் என் தம்பி என்பதால் கனம் தெரியவில்லை' எனச் சொல்லி அழுதான். அதைக் கேட்டதும் உணர்ச்சிவயப்பட்டு வீரரும் அழுதார். இந்த சம்பவம் உணர்த்தும் உண்மை என்ன என்றால் மனிதனை மனமே ஆட்சி செய்கிறது. அதைப் பொறுத்தே உடலும் இயங்குகிறது என்பது தான்.