சுயமதிப்பீடு தேவை
இளைஞன் ஒருவன் பேருந்து நிலையத்தில் இருந்த டெலிபோன் பூத்துக்குள் சென்றான். குறிப்பிட்ட நம்பருக்கு டயல் செய்தான். அருகில் இருந்த பழக்கடைக்காரருக்கு அவன் போனில் பேசுவது தெளிவாகக் கேட்டது. இளைஞன்: “சார் உங்கள் தோட்டத்தை பராமரிக்கும் வேலையை எனக்கு தர முடியுமா”?எதிர் முனையில்: “எனது தோட்டத்தை ஏற்கனவே ஒருவர் பராமரித்து வருகிறார்”இளைஞன்: “சார் அவருக்கு கொடுக்கும் சம்பளத்தில் பாதி கொடுத்தால் போதும்” என்றான்.எதிர் முனையில்: “இல்லை இப்போது பணிபுரிபவர் நன்றாக பணியாற்றுகிறார். எனக்கு திருப்தியாக உள்ளது'' என்று சொல்லி இணைப்பை துண்டித்தார். பழக்கடைகாரர் இளைஞனை அழைத்து, “ தம்பி... உன் அணுகுமுறையும், பேசும் முறையும் எனக்கு பிடித்திருக்கிறது. என் கடைக்கு வேலையாள் தேவைப்படுகிறது வருகிறாயா'' எனக் கேட்டார்.''நன்றி ஐயா... ஆனால் எனக்கு வேலை வேண்டாம்'' என்றான். ''இவ்வளவு நேரம் வேலைக்கு மன்றாடினாயே...'' எனக் கேட்டார் பழக்கடைக்காரர். . ''நான் நன்றாக வேலை செய்கிறேனா என தெரிந்து கொள்ளவே என் முதலாளியிடம் இப்படி பேசினேன். அந்த தோட்டத்தை பராமரிப்பவனே நான்தான்'' என்று சொல்லி நகர்ந்தான் இளைஞன். இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு. 'நம்மை நாமே நிதானித்து அறிந்தால், நாம் யாரிடமும் நியாயம் கேட்க தேவையில்லை.