காரணம் உண்டு
UPDATED : மார் 08, 2024 | ADDED : மார் 08, 2024
பண்ணையார் ஒருவர் பருந்தையும், சேவலையும் வளர்த்து வந்தார். அவர் அழைத்தால் பருந்து அவரது கையில் வந்து உட்காரும். ஆனால் சேவலை அழைத்தாலோ ஓடி விடும். ஒருமுறை, ''உங்களுக்கு நன்றி கிடையாதா... பசி வந்தால் எஜமானைத் தேடி வருவீர்கள். காட்டுப்பறவையாகிய நாங்கள் பலசாலிகள். மனிதர்களைக் கண்டு பயப்பட மாட்டோம். உணவு அளிப்பவரை நாங்கள் மறப்பதில்லை'' எனப் பருந்து பெருமை பேசியது.அதற்கு சேவல், '' பண்ணையார் சாப்பிடும் உணவில் நீங்கள் இடம் பெற மாட்டீர்கள். ஆனால் நாங்கள்...?' என பதிலளித்தது. ஒவ்வொரு செயலுக்கும் காரணம் உண்டு.