சம்மட்டி அடி
UPDATED : ஜூன் 21, 2024 | ADDED : ஜூன் 21, 2024
இரண்டு கோழிகளை வளர்த்தாள் சிறுமி பிலோமினா. அவை பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் மேய்ந்தன. அதைப் பார்த்ததும் தோட்ட உரிமையாளர் குஞ்சுகளின் கழுத்தை திருகி துாக்கி எறிந்தார். அதைப் பார்த்த சிறுமி கதறினாள். இருந்தாலும் அவற்றைக் கொண்டு போய் தாயிடம் கொடுத்து சமைக்கச் சொன்னாள். உணவை எடுத்துக் கொண்டு பக்கத்து வீட்டுக்குச் சென்றாள். ''பசியோடு இருக்கும் நீங்கள் இந்த உணவை சாப்பிடுங்கள்'' என்றாள். சம்மட்டியால் அடித்தது போல உணர்ந்த அவர், செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டார். எதிரிகளையும் நேசியுங்கள்.