உள்ளூர் செய்திகள்

பல்லும்! நாக்கும்!

சீன தத்துவ மேதையான லாவோட்சே, நோய்வாய்ப்பட்டிருந்த தன் குருநாதரைக் காணச் சென்றார். அவரிடம் தனக்கு உபதேசம் செய்யும்படி தெரிவித்தார். சீடரை பரிவுடன் பார்த்த அவர், தன் வாயைத் திறந்து, ''உள்ளே நாக்கு இருக்கிறதா...'' எனக்கேட்டார். ''ஆம்! ஐயா உள்ளது'' என சொன்னார். ''சரி. என் வாயில் பல் இருந்ததா'' என மீண்டும் கேட்டார் குருநாதர். அதற்கு அவர், ''பல் இல்லை'' என தெரிவித்தார். ''இதற்கு காரணம் சொல்ல முடியுமா'' எனக்கேட்டார். சிறிது நேரம் யோசித்த சீடர், ''ஐயா. நாக்கு மென்மையானது. எனவே கடைசி வரை உள்ளது. பற்கள் கடினமானவை. அதனால் விழுந்து விட்டன'' என்றார். இதைக்கேட்ட குருநாதர், ''உலகத்தை சரியாக புரிந்து கொண்டாய். இனி உபதேசம் உனக்கு தேவை இல்லை'' என்றார்.