மனதில் நிம்மதி குடிகொள்ளும்
UPDATED : டிச 02, 2022 | ADDED : டிச 02, 2022
இங்கிலாந்தை சேர்ந்த பணக்காரர் ஒருவர் இயற்கையை ரசித்து வாழ்ந்து வந்தார். பூந்தோட்டத்திற்கு சென்றால், 'இயற்கையில் இவ்வளவு அழகான மலர்கள் உள்ளது. இந்த மலர்களை போல் எல்லோரது மனமும் அழகாக இருந்தால் எப்படி இருக்கும்' என்று மகிழ்வார். இதுபோல் நீங்களும் இயற்கை வளம் மிக்க இடங்களுக்குச் செல்லுங்கள். கடற்கரையில் போய் அமர்ந்து அலையடிக்கும் கடலின் அழகை ரசியுங்கள். மனதில் நிம்மதி குடிகொள்ளும்.