மகிழ்ச்சி எங்குள்ளது
UPDATED : டிச 11, 2022 | ADDED : டிச 11, 2022
ஜெனிபர் என்ற பெண்ணிடம் பணம் அதிகம் இருந்தும், சோகத்துடனே காணப்பட்டாள். ஒருநாள் பூங்கா ஒன்றில் அமர்ந்து இருந்தாள். அப்போது அங்கு இருந்த சிறுவன் ஒருவன் சோகமாக நின்றிருந்தான். அதைப்பார்த்த ஜெனிபர், ''தம்பி! ஏன் கவலையாக இருக்கிறாய்?'' எனக்கேட்டாள்.''விபத்து ஒன்றில் என் பெற்றோர் இறந்து விட்டனர். நான் அனாதை இல்லத்தில் இருக்கிறேன்'' என அழுதான். ''அழாதே! நான் இருக்கிறேன்'' என்று ஆறுதல் சொன்னாள். பின் அந்த இல்லத்திற்கு சென்று உதவி செய்தாள். அங்கு இருந்த குழந்தைகளின் முகம் மலர்ந்தது. 'இத்தனை நாளாக பிறருக்கு உதவி செய்யாமல் இருந்து விட்டேனே... உண்மையில் மகிழ்ச்சி என்பது பிறருக்கு உதவுவதில்தான் உள்ளது' என்பதை புரிந்து கொண்டாள்.