உள்ளூர் செய்திகள்

எட்டுச் சாவிகள்

1. உங்கள் பக்கத்தில் எப்போதும் பாசிட்டிவ் மனிதர்களை இருக்க செய்யுங்கள். அவர்களிடம் எல்லாப் பிரச்னைகளுக்கும் ஏதோ ஒரு வகையில் தீர்வு இருக்கும். ஆனால் நெகட்டிவ் மனிதர்களுடைய எல்லா தீர்வுகளுக்கும் ஏதோ ஒரு பிரச்னை காத்திருக்கும். 2. ஒரு செயலுக்காக கவலைப்படுவதால் அது சரியாகாது. மாறாக அது மகிழ்ச்சியை இல்லாமல் ஆக்கி விடும். எனவே நாளைய தினத்தைப் பற்றி நாளை முடிவெடுக்கலாம் என தீர்மானம் கொள்ளுங்கள்.3. உங்களிடம் இல்லாதவற்றை நினைக்கும் போது தான் கவலை அதிகரிக்கும். இருப்பதை மட்டும் நினைத்துப் பாருங்கள்; அதிகமான மகிழ்ச்சி அடைவீர்கள்.4. மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இரண்டே வழி உள்ளன. சூழ்நிலையை மாற்றுங்கள் அல்லது சூழ்நிலைக்கேற்ப நீங்கள் மாறுங்கள்.5. மற்றவர்களுக்கு நல்லவராக இருப்பது முக்கியம் தான். உங்களுக்கு நீங்களே நல்லவராக இருப்பது அதைவிட முக்கியம்.6. 'இன்று மிக மோசமான நாள்' என அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள். அந்த நாளின் மோசமான சில நிமிடங்கள், உங்களது மகிழ்ச்சியான நேரத்தை மறைத்து விட்டது என்பதை உணருங்கள். உங்கள் வாழ்க்கையில் இன்னொரு மோசமான நாள் வராது.7.இந்த உலகில் எதுவுமே நிரந்தரமில்லை இன்று மட்டுமே நிஜம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்8. கடந்தவற்றைப் பற்றிக் கவலைப்படாதீர், இருப்பதை நினைத்து நன்றியுணர்வோடு இருங்கள். நடக்கப் போவதை நினைத்து நம்பிக்கை கொள்ளுங்கள்.இதுவே மகிழ்ச்சியான வாழ்வுக்கான எட்டு சாவிகள். இவற்றில் ஒன்று உங்களிடம் கிடைத்தாலும் மீதமுள்ள ஏழு சாவிகளும் தானாக வந்தடையும்.