பயமா... இனியில்லை
பெரியபுராணத்தில் உள்ள சிவநாமங்களை தொகுத்துள்ளோம். கார்த்திகை சோமவாரத்தன்று பாடினால் பயம் தீரும். மனதில் தெளிவு பிறக்கும். உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவா போற்றிநிலவுலாவிய நீர்மலி வேணியா போற்றிஅலகில் சோதியா போற்றிஅம்பலத்தாடுவாய் போற்றிமலர்ச் சிலம்படியோன் போற்றிமதிவளர் சடைமுடி மன்றுளாய் போற்றிகாதில் வெண் குழையோன் போற்றிநெற்றியில் கண்ணா போற்றிநீரணி மேனியா போற்றிகையில் மான் மழுவா போற்றிகங்கை சூழ் சடையா போற்றிகதிர்இளம் பிறை நறுங்கண்ணி ஐயனே போற்றிமதிபொதி செஞ்சடை சென்னியா போற்றிவிடை மருவும் பெருமான் போற்றிகங்கையும் மதியும் பாம்பும் கடுக்கையும் முடிமேல் வைத்த அங்கணா போற்றிமாதொரு பாகா போற்றிபிஞ்ஞகா போற்றிநெற்றி விழியா போற்றிகங்கை சடைக்கரந்த பிரானே போற்றிமின்னார் செஞ்சடை அண்ணலே போற்றிநீராரும் சடை முடிமேல் நிலவணிந்தாய் போற்றிஅரவின் ஆரம் புனைந்தாய் போற்றிபந்தம் வீடுதரும் பிரானே போற்றிமை விரவுகண்டா போற்றிஅந்தண் புனலும் அரவும் விரவும் சடையோன் போற்றிபொன்னின் புரிபுன் சடையா போற்றிமேலவர் புரங்கள் செற்ற விடையா போற்றிதொல்லை மால்வரைபயந்த துாயாள்தன் திருப்பாகா போற்றிமுன்னம் மால் அயனறியா முதல்வா போற்றிஉம்பர் நாயகா போற்றிஅற்புதத் தனிக் கூத்தாடும் நாதா போற்றிபுனற் சடைமுடியார் போற்றிதிங்கள் கண்ணி மன்றுளாய் போற்றிமின்னொளிர் சடையா போற்றிபிறைவளர் சடைமுடிப்பிரானே போற்றிவம்புலா மலர்ச்சடை வள்ளலே போற்றிமலைமகள் கேள்வா போற்றிகறை மறை மிடற்றினாய் போற்றிஇழையணி முந்நுால் மார்பின் எந்தையே போற்றிகழுத்து நஞ்சொளித்து நின்றவா போற்றிவெங்கண் விடையா போற்றிகறைகமழுஞ் சடைமுடியும் நாற்றோளும் முக்கண்ணும் கறை மருவும் திருமிடறும் கரந்தருளி எழுந்தருளும் மறையவா போற்றிசின விடைப்பாகா போற்றிவேத முதல்வா போற்றிவிடையின்மேல் வருவாய் போற்றிசெக்கர் வெண்பிறை சடையா போற்றிஆறு சூடிய ஐயரனே போற்றிஆயநுண்பொருள் ஆகியும்வெளியே அம்பலத்தில் ஆடுவாய் போற்றிகொன்றைவார் சடையா போற்றிஇருவரால் அறிய ஒண்ணா ஒருவா போற்றி